106
இதழ்கள்
ថ្ងៃ இதழ்கள் 'எனக்கெட்டாதேப்பா? உங்கம்மா இருந்தா வெச் சுப்பா. அவளே ஆஸ்பத்திரியிலே யிருக்கா. பின்கட்டுப் பொண்ணையாவது பறிச்சு வெச்சுக்கோடின்னு சொல்ல லாம்னாஅதுக்கு என்னவோ பொறந்தாத்து நினைப்பு எடுத்து இன்னிக்குத்தான் போயிருக்கு.” 'அப்போ என்னத்னதப் பண்றது பாட்டி?” “என்னத்தைப் பண்றது? ஒண்னும் பண்றத்துக்கில்லை. ஒரு திமிஷம் பொறுத்து, பூத்தும் சூடாத பூக்கள் எத் தனையோ?” என்றாள். இந்த மாதிரி சமயங்களில்தான். பாபுவுக்குப் பாட்டியைப் பிடிப்பதில்லை. புசுக்கு’ என்று புரிந்தும் புரியாத வார்த்தை களை ஏதாவது போட்டுவிட்டு அதை விளக்காமல் கம்மென்று பூஜ்யமாய் உட்கார்ந்துகொண்டிருப்பாள். கிழவிக்கே அதில் ஒரு திருப்தி. ஒரு அகந்தை. புரிஞ்சுக்கறவா புரிஞ்சுக் கட்டுமே புரியாதவா தவிச்சிண்டிருக்கட்டுமே!’ 'பாட்டி, மழை வரப்போறது; மானம் ஒரேயடியா இருட்டிண்டிருக்கு.” 'மழை பெய்யறதும் மக்கட்பேறும் மகாதேவனுக்குக் கூடத் தெரியாது.” அவள் சொல்லி முடிவதற்குள் படபடவென்று மழை பலத்த சாரலுடன் தோட்டத்தில் இறங்கிவிட்டது. ஒவ் வொரு தூறலும் பாபுவின் மணிக்கட்டு பருமனுக்கிருக்கும். படபடவென வாசல் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. 'அம்மா~அம்மா!’ 'இதோ வந்துாட்டேண்டா' கிழவிக்கு எழுந்திருக்க முடியவில்லை. திடீரென ஒரு புது கனம் அவள் உடன்ல அழுத்திற்று. முயற்சியுடன் எழுந்து சென்றாள், பின்னாலேயே பாபுவும் போனான். வாசலில் ஸாரதி நின்று கொண்டிருந் தான். தெப்பமாய் நனைந்து உடை உடம்புடன் ஒட்டிக் கொண்டிருந்தது. மயிர் முகத்தில் வழிந்து நெற்றியோடு ஒட்டிக்கொண்டிருந்தது, அவன் முகம் ஸ்ஹிக்க முடியவில்லை. அம்மாவைப் பார்த்ததும் அப்படியே கட்டிக்கொண்டான்.