உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

இதழ்கள்

# , , இதழ்கள் குத்தது. இன்னமும் அவர் கையில் குழந்தையைக் கொடுத்து வாங்கிக் கொண்டு போய்க் கொண்டு தானிருந்தார்கள். தன்னைக் கண்டால்தான் இப்படி. அம்மா சின்ன வயதில் ரொம்பவும் அழகாய்த்தானிருந்திருப்பார். ஆனால், பாவம், பற்கள்தாம் நிற்கவில்லை. வெறும் வாயை மென்று கொண் டிருப்பார். பார்க்கவி உடம்பை ஒடுக்கிக் கொண்டு சுவரோரமாய் நகர்த்து வாசலைத் தாண்டினாள். அதாண்டி கேட்டேன்! பில்ல்ைத் தேய்க்காத பவிஷோடு மேலே இடிச்சுண்டே போ! ஏன்னா, உனக்கு இன்னும் பொழுது விடியாவிட்டாலும் வெள்ளி முளைக்கறதுக்கு முன்னாலே நான் ஸ்நானம் பண் னிட்டு நிக்கறேனே, உனக்குப் பொறுக்குமா? இந்த ஒரு வேளை சோத்தைத் தானே பொங்கித் தின்கற மாமியார், ஆதையும் நாறாமல் ஏன் தின்கனும்? ஊஹூம்-மண்டை வெடிச்சூடாதா?” - அவர் மேல் தன் காற்றுக்கூடப் படவில்லை என்று அவளுக்குத் தெரியும். தெரிந்து யார் பதில் சொல்றது? தர்க்கத்தான் மிஞ்சும், படிப்படியாய்ப் பார்க்கவி மாடி இறங்கினாள். பின்னாலேயே அவளை முழுங்கிவிடும் பசி யோடு அம்மாவின் பார்வை அவள் முதுகைத் துளைப்பதை அவள் உணர்வாள். 'இந்தப் பார்வைதான் அம்மாவின் வாயைவிட எனக்குத் திகிலாயிருக்கு. என் உடம்பின் ஒரொரு அசைவையும், செய் கையையும் இவர் இப்படித் தொடர்ந்து கவனிக்கறப்போ என்னுடைய தப்புகள் மாத்திரம் என்மேல் ஈட்டிகள் மாதிரி தலை நீட்டிக்கொண்டு நிக்கறதுகள். நான் என்ன செய்வேன்? என்னிக்கு நான் வாய்விட்டு அலறிடுவேனோ! உதட்டைக் கடிச்சு அந்த உளறல் கத்தலை உள்ளுக்குத் தள்ளறத்துக் குள்ளே உன் பாடு என் பாடாயிடறது. அந்த அசதி தாங்கா ஒல் ஒவ்வொரு சமயம் சுவத்துலே சாஞ்சுடறேன். இந்த வேட்டைப் பார்வையால் எனக்கு என்னிக்குப் பைத்தியம் துடிசசுடுமோ? இல்லாட்டா ஏற்கெனவே புடிச்சுடுத்தோ? ஆனால் எனக்குப் புடிச்சால் எனக்குத் தெரியுமோ...?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/112&oldid=1247210" இலிருந்து மீள்விக்கப்பட்டது