பக்கம்:இதழ்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

இதழ்கள்

122 இதழ்கள் சுழலும் காற்றுக்கே ஒரு விறுவிறுப்பு இருந்தது. அதில் சண்டையின் அண்ட கோசங்கள் எந்தச் சமயத்தில் நாம் நம் உருவைப் பெறப் போகிறோம் எனக் காத்திருந்தபடி நீந்திக் கொண்டிருக்கும். இப்போத்தான் ஆறு மாலத்திற்கு முன்னால்-அவர் போறத்துக்கு ரெண்டு மாஸ்த்துக்கு முன்னால்-ஒரு முக் காலணாக் கடிதாசு வீட்டுக்கு வந்தது. விலாசம் விலாசமாத் தேடியலைஞ்சு திரிஞ்சுட்டு, தபால் ஆபீஸ் வால் ஒண்ணைத் தாங்கிண்டு, முத்திரையின் உதையெல்லாம் பட்டுண்டு, அது வந்த வேளைக்கும் அதை எழுதின தேதிக்கும் ஆறுமாஸ் இடை நாள் இருக்கும். அவள் தகப்பனார் காலமாகிவிட்ட செய்தி கண்டிருந்தது. யாரோ அக்கம் பக்கத்தில் அரை குறையாகத் தெரிந்த ஒரு மாமி அவளுக்கேதான் எழுதியிருந்தாள், கொச்சை கொச்சையாக! - 'உன் அப்பாவை மூணு நாளா தேடு தேடுன்னு தேடியும் அகப்படல்லே, நந்தவனம் நாத்தம் அடிக்க ஆரம்பிச்சுடுத்து. என்னன்னு பார்த்தா, ஒரு புதர் மறைவில் மனுஷன் விழுந்து கிடக்கான். உடல் முழுக்க நீலம் பாரிச்சுக்கிடக்கு. யாருக்குக் காத்திண்டிருக்கிறது? வெட்டியான் தலையாரி மணியக்காரன் எல்லாம் வந்துட்டா. நீ வரவரைக்கும்னா, நீ போய் அஞ்சு வருஷமாயும் இந்தப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கல்லே. நீ எங்கேயிருக்கேன்னு யார் என்னத்தைக் கண்டா? எனக்கு மனசு கேக்கல்லே. எனக்குத் தெரிஞ்ச விலாஸ்த்துக்கு இதை எழுதிப் போடறேன். இதுவே போய்ச் சேர்றதோ இல்லையோ? சமத்தாயிரு. நான் வேறென்னத்தைச் சொல்லப் போறேன்...?” அன்று முழுவதும் வீடு ஒரே ரகளை. அவருக்கென்ன, சமாசாரம் கேட்டதற்கு ஸ்நானம்கூடப் பண்ணாமல் வெளியே போயிட்டார். அம்மாதான் கூடத்தில் இரைஞ்சுண்டிருந் தார், பழங்கதையெல்லாம் புதுக்கதையாய்ப் படிச்சிண்டு.

நன்னா வேனும் அவனுக்கு கோவிந்தாக் கொள் ளிக்குத் தானே அவன் லாயக்கு கிடைக்க வேண்டியதுதான்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/122&oldid=1247220" இலிருந்து மீள்விக்கப்பட்டது