130
இதழ்கள்
i3{} இதழ்கள் 'நான் மாட்டேன் அம்மா-' }** 'ஆ பாத்தியா, பாத்தியா-பாத்தியாடா அம்பி அம்மா சிரிப்பில் புகை கிளம்பிற்று. இதுக்குத்தான் சொன் னேன்; இந்த வீட்டில் ஏதோ சூது நடக்கறதுன்னு! இப்போ இன்ங்கிப் போச்சோன்னா?” அழுகை, தைரியம், ஆத்திரம் எல்லாம் ஒருங்கே அவளை அழுத்தின. 'உங்களுக்கு என்ன வேனுமானாலும் விளங்கிக் கட்டும். நீங்கள் என்ன வேணுமானாலும் நினைச்சுக்கலாம். எனக்கு அதைப் பற்றி அக்கறையில்லை. நான் மாட்டேன். அவ்வளவுதான். சாமியே உங்களுக்குத்தானிருக்கிறார். மத்த வாளுக்கில்லைன்னு மூக்கைப் பிடிச்சுண்டு பூஜை பண்ணின்டு தலையில் தூக்கிவெச்சுண்டு நான் கூத்தாடவும் இல்லை. அடுத்த நிமிஷம் காலில் கட்டி இந்த மாதிரி அடிக்கவுமில்லை. ரெண்டுமே எனக்கு வேண்டாம்! மாட்டேன்னா மாட்டேன்.” அவள் போட்ட கத்தலில் தொண்டை கிழிந்தது. கால் கட்டை விரலிலிருந்து ரத்தம் பாய் மாதிரி சுருண்டு கொண்டே வந்து தலைக்கேறிற்று. மடேரென்று அப்படியே குப்புற விழுந்து விட்டாள். அப்புறம் என்ன நடந்ததென்று தெரியாது. மறுபடியும் விழித்துக் கொள்கையில் அவளைக் கும்மிருள் சூழ்ந்திருந்தது. உடம்பைக் கல்மேல் அறைந்தாற்போல் கணுக்கணுவாய் முறித்து வலித்தது. 'அம்மா-” நினைவு மெதுவாய்க் கூட ஆரம்பித்தது. அவளோ அவள் தாயாரைக் கண்டது கூட இல்லை. ஆனால் அதெப்படி 'அம்மா'ன்னுதான் முதலில் தோண்றது? அம்மா” என்கிறது ஆதிமூலக் குரலோ? அந்தச் சமயம் அவள் மேல் ஒரு கை பட்டது. ஸ்பரிசத திலிருந்து கணவர் என்று அறிந்தாள்; ஆனால் வாய் திறக்க முடியவில்லை. பல் கிட்டிவிட்டது. அவர் தொடும் தினுசிலிருந்துதான் முழித்துக் கொண்டது அவருக்குத் தெரிய வில்லை எனத் தெரிந்தது, அவர் கை. அவள் தோளிலிருந்து