உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

131

இதழ்கள் 43 i

மணிக்கட்டிற்கு இறங்கி, கைக் காப்பைக் கழற்ற ஆரம் த்தது. முழுத் தங்கம்கூட இல்லை. உள்ளுக்குக் கட்டை கொடுத்து, மேலே தகடு அடித்ததுதான். நெஞ்சிலேயே சதை உரித்தாற்போல் அவளுக்கு ஒரு புது வெளிச்சம் உண்டாயிற்று பயங்கர வெளிச்சம்: முன்னது, பின்னது, தற்போது எல்லாம் ஒருங்கே புரியும் அதிர்ச்சியில் வாயிலிருந்து வார்த்தையும் விடுபட்டது. 'இந்தாங்கோ நான்ே, தரேன்- சட்டென் உருவி அவன் கைக்குள் திணித்தாள். கை சட்டென்ப் பின் வாங்கிற்று. கால்கள் ஓடின. கதவு மூடிற்று. இப்போ எல்லாம் புரிந்தது. அம்மா இடுப்பில் சதா சர்வக்காலமும் (தூங்கும் போது கூட) சாவிக் கொத்து ஏன் தொங்குகிறது. அவள் கணவனுக்கு திடீர் திடீரென ஏற்படும் பண செனகரி யங்கள், அந்தச் சமயங்களில் ஆடு அன்னிக்கு, மாடு மத்தி யானம் என்று அவர் நடத்தும் தர்பார்கள், சேர்த்தாற்போல் நாள் கணக்கில் காணாமல் போய்விடுவது, ஆட்கள் அவரை அடிக்கடி தேடி வருவது, சில சமயங்களில் எதற்கும் துணிந்த அவருடைய முரட்டு தைர்யங்கள், திடீர் உற்சாகங்கள், அடுத்தாற்போலேயே மூணு நாட்கள் மூஞ்சியைத் தொங்கப் போட்டுக் கொண்டு யாருடனும் பேசாமல் கூனிக் குறுகி உட்கார்ந்திருக்கும் ஒடுக்கங்கள், குடும்ப விவகாரங்களில் எதையுமே காதில் வாங்கிக் கொள்ளர்மல் இருப்பது, அநியா யங்களுக்குக்கூட அம்மாவுடன் ஆட்சேபிக்காமல் இருப்பது, தன் சிந்தனையே தன்னையடைத்துக் கொண்டிருப்பதால் பிறரோடு ஒட்ட இஷ்டமோ சக்தியோ இல்லாமல் இருப்பது: உறக்கத்திலும் விழிப்போடு இருக்கும் காட்டு விலங்குபோல் ஒரு சதா உஷார்-அவரிடம் எப்போதுமே நேர்ப்பார்வை யில்லை. ஒரப்பார்வைதான்-குடும்பச் செலவுக்கு அம்மன் ஏன் பிள்ளையை நம்பியில்லை, நூறு ரூபாய் நோட்டு எப்படிக் காணாமல் போயிற்று (அம்மாவுக்குத் தெரிஞ் சிருக்க்ாதா என்ன? உள் மனசுக்கு உள் மனது ஒண்ணு இருக்கே, அது தெரிஞ்சிண்டிருக்கும்) எல்லாமே, கும்விருட்டில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/131&oldid=1247229" இலிருந்து மீள்விக்கப்பட்டது