உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

135

இதழ்கள் #35

கதவைத் தன் பின்னால் மூடிக்கொண்டு தடதட்வெனப் படிக்கட்டுக்களில் இறங்கிச் செல்லுகையில் அறையே சற்று இருண்டாற் போலிருக்கிறது. தன்னொளியுடன், என் தெம்பிலும் கொஞ்சம் பிடுங்கிக் கொண்டு செல்கிறாள். சோர் வுடன் தலையணைமேல் மீண்டும் சாய்கிறேன். செண்டில் என் முகத்தைப் புதைத்துக் கொள்கிறேன். அதன் மனத்தில் தலை சுற்றுகிறது, இப்படிப் போவதற்கு இவள் இங்கே வருவானேன்? நான் பசித்தவன். ரொம்பவும் பசித்தவன். எதிலும் எனக்கு எவ்வளவு இருந்தாலும் போதவில்லை. எல்லோரை யும் விழுங்கிவிட்டுக் காயும், பூவும், இலையும் உதிர்ந்த தான் மாத்திரம் நடுத்தண்டாய் நிற்கிறேன். இந்தத் தனிமை யாருக்கு வேண்டும் என்றால் யாரை விடுகிறது? உன் தனிமை உன் சுமை: என் பழங் கணக்குகள் என்னவை. பசித்தவனின் பழங் கணக்குகள். X X X 篱 அம்மா! அம்மா!! மூல மூச்சின் ஜீவாவில் உருவான முதல் ஒசை, இதன் எதிரொலிக்கு மிஞ்சியது எது? அம்மா! அம்மா! அம்மா!!! குபுக் குபுக் குபுக் என்று மூச்சடைக்கிறது. கழுதை வய தாகியும் குழந்தையின் வெட்கமற்ற கண்ணிர் கன்னங்களின் வாய்க்காலில் கரை புரள்கிறது. நான் தளையவிழ்கிறேன். இவ் வெள்ளத்தில் இதழ்கள் ஒவ்வொன்றாய்க் கழன்றும், பிய்ந்தும், அலைந்தும், சுழன்றும் அதனதன் வழியே செல் கின்றன. உள் நினைவின் ஒரே இதழ்மேல் படுத்து அது போன படி மிதந்து செல்கிறேன். இந் நிலையில் நான் நினைவுகளில் எடுபடுகிறேன். அந்தந்த நினைவுகளின் எந்தெந்த வேளையோ அந்தந்த வேளையின் அந்தந்த உருவில் இருக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/135&oldid=1247233" இலிருந்து மீள்விக்கப்பட்டது