பக்கம்:இதழ்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

15

இதழ்கள் 15

அவள் மலர மலர விழித்தாள். அப்போதுதான் அவன் கேள்வியின் அசட்டுத்தனம் தெரிந்தது. கூடவே அன்றைய காலைச் சம்பவங்களும் ஞாபகம் வந்தன. இருவரும் அவரவர் யோசனையில் தரையைப் பார்த்துக் கொண்டு நடந்தனர். அப்போதுதான் புதிதாய்க் காண்பதுபோல் பிருகாவின் உருவம் நினைவில் எழுந்தது. அப்பா அக்குண்டு சாமிக்கு இக்குண்டு நாமம்; என்னாது?’ என்று பிருகா ராகம் போட்டுக்கொண்டு. கேட்டாள். - - "அது நீl-' என்று சுட்டு விரலால் அவன் வயிற்றில் குத்துவான். அப்பாவுக்கும் பெண்ணுக்கும் திரும்பத் திரும்ப இதே கேள்வியிலும் அதற்கு அதே பதிலிலும் அலுக்காத ஒரு தனி சந்தோஷம், அவர்களுக்கே சரியாய்ப் புரியாத ஒரு தனி சந்தோஷம், அவர்களுக்கே சரியாய்ப் புரியாத ஒரு ரகஸ்யத் தொனி. - பிருகா அப்படித்தானிருந்தாள். புறாப்போல் சின்ன முகம். அதற்குள் அதற்கேற்ற அவயவங்கள். நெட்டிபோல் லேசான, சிறிய உடல் அமைப்பு. அம்பி பாப்பாவே அவளை விடக் கனம். கிண்டி மூக்கிலிருந்து ஜலம் கொட்டுவதுபோல் சதா பேச்சு. வயதுக்கு மீறிய பேச்சு, மொச்சு மொச்சுன்னு அதென்ன பேச்சோ? பேசிப் பேசியே தேய்ஞ்சு தீசலாப், போறையேடி, அந்த வாய்க்குத்தான் கொஞ்சம் ஒய்ச்சல் கொடேன்!- என்று அவள் அம்மை எரிச்சலுடன் அவள் பொத்தான் உதடுகளைத் திருகுவாள். "ஊ - ஊ - வலிக்குது - கையோடு வந்துடும்'.பிருகா கத்துவாள். பிருகாவுக்கு இன்னும் பெயர்கள் உண்டு. சோனா (சோனியாயிருப்பதால்) சூம்பா (சூம்பியிருப்பதால்) விருச்சிகா (நின்றவிடத்தில் நில்லாமல் இருப்பதால்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/15&oldid=1247294" இலிருந்து மீள்விக்கப்பட்டது