உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

161

இதழ்கள் 16;

"சரியாய்ப் போச்சு: இங்கு வந்து எவ்வளவோ மட்டுக் கட்டிப் போச்சு. உங்களுக்கு வேண்டா விட்டால் உங்கள் வீதத்தையும் அம்மாவிடமிருந்து வாங்கி என்னிடம் கொடுத்து விடுங்கள். நீங்கள் குடித்தால் என்ன நான் குடித்தால் என்ன?’ என்று சொல்லிக் கொண்டே இன்னொரு விழுங்கு குடிப்பாள். குருவி மாதிரி தலையை ஒரு பக்கமாய்ச் சாய்த்துக் கொண்டு குறும்பாய்ப் பார்த்து அவனுக்கும் சிரிப்பை மூட்டி விடுவாள். இதோ இப்போது கண்ணாடியில் உஷையின் முகத்தில் சிசிப்புத் தோன்றுகிறது. பழைய, வாய் திறந்த, பற்கள் பள பளக்குங் கிண்கிணிப் பல் அல்ல. கிணற்றுச் சுவரின் உட் புறத்தில் நலுங்கும் நிழல்போல், விசனம் தோய்ந்து, மனமே இல்லாது உதட்டின் ஒர் ஒரத்தில் ஆரம்பித்துப் பட்டாசுத் திரிபோல் சப்தமற்று தன்னைத்தான் துரத்திக் கொண்டு, மறு ஒரத்தில் முடித்து திரும்பி மிரண்ட புன்னகை. என்ன சிரிக்கிறாய்?" அவள் புன்னகை இன்னும் வெளிச்சம் அடைந்தது. ‘'இப்போது நான் கண்ணாடியில் இரண்டு உருவங்களைப் பார்த்தேன். அவனும் கண்ணாடியில் இன்னொரு தரம் பார்த்துக் கொண்டான். 'இல்லை, நான் பார்த்த உருவங்களை நீங்கள் பார்த்தீர் களோ இலலையோ?” அவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ஒன்றும் காணாமல் சற்றுக் கலவரம் அடைந்தான். எழுந்து சென்று கட்டிலில் அவளருகே அமர்ந்தான். ‘என்ன பார்ந்தாய்?" "சர்வாபரண பூஷிதையாய் ஒவ்வோர் அசைவிலும் புதுப்புடவை சல சலக்க, கூப்பிய கைகளுடன் ஒர் உருவத்தை நான் பார்க்கிறேன். தன் கழுத்து மாலையை உங்களுக்குப் போட்டுவிட்டு உங்களை நமஸ்கரிக்கிறாள்.' அவனுக்குப் புரிந்தது. புல்லரிப்புத் தாங்காது உடல் ஒரு தினுசாய்ச் சிலிர்த்து ஒடுக்கிக் கொண்டது! ‘ட்விக், ட்வீக், ட்வீக்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/161&oldid=1247259" இலிருந்து மீள்விக்கப்பட்டது