பக்கம்:இதழ்கள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

163

இதழ்கள் 163

சே. எல்லாரையும்போல் என்னையும் நினைத்துக் கொண்டாயா, உஷை? இனி என் கஷ்டங்கள் எல்லாம் என் னுடையவை. என் சந்தோஷங்களெல்லாம் உன்னுடையவை' அந்தக் கட்டம் நினைவுக்கு வந்ததும் குருவுக்கு நெஞ்சில் சிசிப்பு முட்டிற்று, சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான். "நான் பேசியது எந்த பாஷை? இப்பொழுது நினைவில் கூட்டு கையில் அது பொய்ம்மையாய் ஒலித்தாலும், அப்பொழுது அப்படி அல்ல. நெஞ்சு நிறைவை உருவாக்க முயன்றால் அப்படித்தான் நேருமோ? "இருங்கள், நமஸ்காரம் பண்ணுகிறேன்.” அவன் பாதங்களின் மேல் அவன் நெற்றி பதிகையில், அழுந்த வாரிய கூந்தவின் கருமை விரியன்போல் தரையில் சோப்பிப் புரண்டது. “எவ்வளவு அழகான பெயர் உஷை, உன் பேர்ை நாக்கில் உருட்டுகையில், மனத்தில் என்ன என்ன தோற்றங் கள் எழுகின்றன தெரியுமா? அதுவும் எல்லாம் ஒரே சமயத்தில்!” 'என்ன தோன்றுகிறது? சொல்லுங்களேன்!”-உஷை சட்டென அவன் பக்கமாய்த் திரும்பிப் புரண்டாள். ஒரு கையால் கூந்தலில் செருகியிருந்த புஷ்பச் செண்டிலிருந்து ஒரு சரத்தைப் பிய்த்து அவன் மேல் எறிந்தாள். இதழ்கள் கண் இமைகளின் மேல் உதிர்ந்து பனித்தன. அவன் விலாவில் அவளுடைய மோதிரம் கீறிற்று. 'பட்சிகளின் கோஷ்டிகானம். சேவலின் அறைகூவல். பசுக்களின் கழுத்து மணிகள். கன்றுக் குட்டிகளின் அம்மே!’ வயல்களில் பச்சைக் கதிர்கள் பேசும் ரகசியங்கள். காய்களின மேல் படரும் செந்திட்டு. ஏற்றச்சாலிலிருந்துசரியும் ஜலத்தின் கொந்தளிப்பு, அதுவே பூஞ்செடிகளின் அடியில் பாய்கையில், மாறும் கிளுகிளுப்பு. அப்பொழுதுதான் பூத்த மலர்களின் புதுமணம், உஷாக்காலப் பூஜையின் ஆராய்ச்சி மணி, கோபுர ஸ்துாபியின் தகதகப்பு. வாசற் குறடுகளின் மேல் பிரம்மாண்ட மான கோலங்கள்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/163&oldid=1247261" இலிருந்து மீள்விக்கப்பட்டது