இதழ்கள்
175
.3 ,حجمي
இதழ்கள் 薰亨5 அதைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டிருக்கிறாய், நான் அப்படி நினைக்கவில்லையே என்று என்னோடு தர்க்க பண்ணாதே. ஒவ்வொருவரும் தான் பிறக்கிற கக்ப்பச் சூட்டோடு ஒவ்வோர் ஆதார சுபாவத்தைத் தாங்கிக் கொண்டு வருகிறார்கள். அதில் சேர்ந்தது என்று வைத்துக் கொள்ளேன். ஒர் உடல் போனால் நிமிஷத்துக்கு இன்னும் லட்சம் உடல் தனக்கு இருக்கிறது என்ற தைரியம் உயிருக்கு எப்போதும் உண்டு என்பதைத் தெரிந்துகொள். இல்லா விட்டால் உன்னையும் என்னையும் மாத்திரம் இந்த உலகம் நம்பிக்கொண்டிருந்தால், எப்போதோ சூனியமாகியிருக்கும் உன் உடலுக்குள்ளேயே எத்தனை உடல்கள் மறைந்துகொண் டிருக்கின்றன என்று உனக்குத் தெரியுமோ? உயிருக்கு என்றைக்குமே சாவு இல்லை. அதற்கு இருக்கிறதைத் தவிர வேறு தெரியாது, ஒன்று இல்லாவிட்டால் ஒன்று, ஒன்றின் பின்னால் ஒன்று என்பதுதான் உயிரின் இயற்கை. அதன் இயற்கைதான் அதன் கொள்கை. ஆசையாகப் பறித்து சிரத்தையாக உன் கையால் நீயே தொடுத்து, கொண்டை யில் அலங்காரமாக இன்றைச் சாயந்தரம் செருகிக்கொண்ட பூவை நாளைக் காலை நீ தானே அதே கையால் பிய்த்து எறிகிறாய்? அதை நீ புரிந்துகொண்டால் எல்லாமே புரிந்து கொண்ட மாதிரி. அதன் மணம் மாத்திரம் சில சமயங்களில் நாள் கணக்கில் கூந்தவில் தங்கிப் போகிறது. அதுதான் அதன் தைரியம். அது மாதிரிதான் எல்லாம். இந்த திமிஷம் பூத்து அடுத்த நிமிஷம் கசங்கிப் போகும் பூவுக்கு இவ்வளவு தைரியம் இருந்தால். நமக்கு இன்னும் எவ்வளவு இருக்க வேண்டும்? தைரியந்தான் சக்தி, தைரியந்தான் உயிர். உஷை, உனக்கு ஒரு கதை சொல்கிறேன்.” உஷை அம்மாவைத் தொடர்ந்தாள். அம்மா சுவாமி அலமாரியில் இருத்த பூஜைப் பெட்டியைத் திறந்து அதிலிருந்து ஒரு சங்கை எடுத்தாள். "இந்தச் சங்கை நான் கல்யாணமாகி, இந்த வீட்டுக்கு வரும்போது என் அத்தை எனக்குத் தந்தாள். சிவகாமு, என் னிடம் இப்போது காசில்லை, பணமில்லை. இதை உனக்குத்