பக்கம்:இதழ்கள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

இதழ்கள்

178 இதழ்கள் י"ע மேல் கொட்டி பெற்றவளைவிட அவன் மேல் பாசம் வைத் திருந்தாள். "ஒரு சமயம் வாஞ்சிக்கு மாபாரதமாக உடம்புக்கு வந்து விட்டது. எந்த வைத்தியத்திற்கும் பிடிபடாமல், புரியாத ஒரு காய்ச்சல் உடம்பை உருத் தெரியாமல் உருக்கி, ஆனை வெறும் எலும்புக்கூடாய், படுக்கையில் கைகால் போட்டது போட்டபடி சாய்த்துவிட்டது. ஆனால் காய்ச்சல் விடவில்லை. பழுக்கப் பழுக்கக் காய்கிறது. 'எனக்கு அப்போது பதினைந்து வயசு இருக்கும். அம்மா இல்லை. அப்பா மாத்திரம் உயிரோடு இருந்தார். அந்த நாள் நன்றாக நினைவிருக்கிறது. அப்பாவுக்கு உடம்பு சரியில்லை, தள்ளாமை, ரேழித் திண்ணையை விட்டு அதிகமாய் நகருவதில்லை. திடீரென்று அவருக்கு என்ன தோன்றிற்றோ தெரியவில்லை. தட்டுத் தடுமாறிக்கொண்டு உள்ளே வந்து, வாஞ்சி கையைப் பிடித்துப் பார்த்தார். வாஞ்சி கண்ணும் கன்னமும் குழி விழுந்து, வாயைப் பிளந்து கொண்டு துரங்கினானோ, நினைவில்லாமல் இருந்தானோ, “தருமு. தருமு:- அப்பா கூப்பிட்டார். அத்தை லொங்கு லொங்கென்று சமையலறையிலிருந்து ஒடி வந்தாள். அத்தைக்குப் பெரிய சரீரம்.

  • தருமு, குழந்தைகளுக்கு ஆன வரைக்கும் சுருக்கச் சோற்றைப் போட்டு எழுப்பு. வாஞ்சியைத் திண்ணைக்குச் சுருக்கக் கொண்டுபோய் விடவேணும்.”

'அத்தை எப்போதுமே சிவப்பு, முள்ளங்கிச் சிவப்பு. அவள் முகத்தில் ரத்தம் குபிரென்று குழம்பிற்று. அத்தை எப்போதுமே தலைக்கு எண்ணெய் வைக்க மாட்டாள், அத்தைக்கு எப்போதுமே மேட்டு விழி; அதிலே விளக்குப் பார்வை வேறே. தல்ை பரட்டையாய், ஒன்றரைக் கண் உருளுகிறபோது, அத்தை காளியாய்க் காட்சியளித்தாள். 'என்னடா பிதற்றுகிறாய்? அத்தைக்கு அப்பா பத்து வயசானது பெரியவர். ஆனால் அத்தைக்கு எப்போதுமே நாக்கு நயம் கிடையாது. வார்த்தையில் மரியாதை கிடையாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/178&oldid=1247276" இலிருந்து மீள்விக்கப்பட்டது