இதழ்கள்
179
இதழ்கள் 17;
'அப்பா தலைமேல் இடி விழுந்தாலும் பதற மாட்டார். என்ன பண்ணுகிறது? கர்மாவை அநுபவித்துத் தானே ஆக வேனும்? வாஞ்சி இன்னும் இரண்டு மணி நேரம் தங்க மாட்டான்.” 'அத்தையின் முகத்தை நான் மறக்க மாட்டேன். மாவுப் பொம்மை கரைகிற மாதிரி முகத்தில் மூக்கு, வி வாய், கன்னம், நெற்றி, மோவாய் எல்லாமே சவுங்கி, உன் இடிந்து ஒன்றோடு ஒன்று பிசைந்து கொண்டு, உரு அழிகிற கோரம் வாஞ்சியின் முகத்தைவிடப் பயமாக இருந்தது. நான் கண்ணை மூடிக் கொண்டேன்.
- வா-ஞ்-சீ-ஈ-ஈ-!”
'உடலையே பட்டை உரிக்கிற மாதிரி, மொனமொன வென்று முறிகிற சப்தத்தோடு வீரல்; அப்படியே வாஞ்சிமேல் விழுந்து விட்டாள். 'அவள் உடம்பிவிருந்து அப்படியே பால் பீதி உடைப் பெடுத்துக் கொண்டு, வாஞ்சியின் முகம், வாய். உடல் படுக்கையெல்லாம் வெள்ளமாக நனைத்துவிட்டன. அந்தப் பாலபிஷேகத்தில் வாஞ்சியின் முகம் திடீரென்று களை கொடுத்தது.” உஷ்ைக்கு உடல் சிலிர்த்தது. 'அத்தைக்குப் பிரக்ஞை வர மூன்று நாளாச்சு. ஆனால் வாஞ்சி பிழைத்து விட்டான். அதற்குப்புறமே அத்தையைக் கண்டால் எங்களுக்கெல்லாம் உள்ளுற ஏதோ ஒரு பயந்தான். அவள் இந்த உலகத்து மனுஷியல்ல. அவள் வழியே தனி வழி. என் மனசுக்கு ஒரு தோற்றம்; அத்தையின் முகமே, எச்சிலைக் தொட்டு அழித்த கோடு மாதிரி, லேசாய்க்கலைத்து போச்சோ என்று. அந்த rணத்தின் உடம்பு ரத்தமெல்லாம் பாலாய் மாறி விட்டதோ? அப்புறம், கறிகாய் நறுக்கும் போதோ, வேறு வீட்டுக் காரியமாகவோ, விரவில் வெட்டுக்காயம் பட்டால் ரத்தம் கொட்டாமல், பாலாய் வடிந்தது என்று பார்த்தவர்கள் பார்க்காதவர்கள் எல்லோரும் பார்த்த மாதிரி சொல்லிக் கொள்வார்கள். ஆனால் இதெல்லா