18
இதழ்கள்
18 இதழ்கள் பிருகாவுக்கு அடியைப்பற்றி அக்கறையில்லை. ஒண்ணா ரெண்டா, இதுவரை எத்தனையோ துடைத்தெறிந்திருக் கிறாள்! ஆனால், அம்மாவின் கோபம்தான் புரியவில்லை. முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு, அப்பா! அம்மா அடிச்சுட்டாப்பா!' என்றாள். போனால் போகிறது, இன்னிக்கோ நாளைக்கோ பெளர் ணமியோன்னா, இப்பொ, எல்லாம் உங்கம்மா அப்படித் தானிருப்பாள். நாம் கொஞ்சம் ஜாக்கிரதையாயிருக்கணும். எங்கே அடிக்சாள்.காண்பி! அவள் கன்னத்தில் முத்தமிட் டான். இப்போ சரியாய்ப் போயிருக்கணுமே! சிரிப்பு வந்துடுத்து, தோ தொண்டையில் நிக்கறது, வாய்க்கு வந்துாடுத்து - அதோ உதட்டில் ஒளிஞ்சுண்டிருக்கு-அதோ ரெண்டு பல் தெரியறது-பக்' பிருகாவுக்கு சிரிப்பு பீரிட்டது. - "அப்பா அம்பி பாப்பா முழிச்சுண்டுட்டான் என்றாள். துளி பலமாய் ஆடிற்று. அதனுள்ளிருந்து ‘ப்பாப்பாஎன்று சப்தங்கள் கிளம்பின. தங்க விமானத்தின் உரை கழன்று விழுந்தாற்போல், குழந்தை துளி மடிகளிலிருந்து, குருவின் அணைப்பில் வெளிப் பட்டான். கொழ கொழத்த பால் சதையில் கொழுகொழு உடலும் முகமும் மார்மேல் அழுந்துகையில் குருவுக்கு இன்பம் தாங்கமுடியவில்லை. கண்கள் செருகின. இந்த அனுபவம் மேல் சதை மட்டில் நிற்கவில்லை. உடலை யூடுருவி, இதயத்தின் தன்மையின் உள் சத்தோடு சேர்ந்து, அங்கு வறண்ட இடங்களைக் கிளறி, ஈரத்தை வருவித்ததும் இதழ்கள் மலர்ந்தன. அப்பா, இந்த சுகம் எத்தனை கஷ்டங்களும் தாங்கும். இது இல்லாவிடில் பிறகு வாழ்க்கையில் நோக்கே ஏது? என் உயிர், இந்த ஸ்பரிசத்தில், இன்றைய உழலுக்கு வேண்டிய பலத்தைப் பெற்று, இன்றைய வெய்யிலுக்கும் மழைக்கும் புயலுக்கும் தயாராகிறது. நாளைக்கு நாளைய உணர்வு. நாளைக்கு நாள் அப்படி அப்படி,