உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

27

சொல்லே உனக்கு விஷமாகிறது, போயும் போயும் போனா லும் போறதுன்னு உன் அண்ணனை கேட்டையே, என்னத் தைப் பண்ணிப்பிட்டே நீ, நீ இப்போ மன்னியோடு குடித் தனம் பண்ணறையே அது மாதிரி என் ஆம்படையானோடு நான் வாழ உனக்கு சஹிக்கல்லேன்னு.

ஆமா கேட்டேன். இல்லேன்னு சொல்லவில்லையே! அதான், பாலை வார்த்த இடத்தில் விஷத்தைக் கக்கி னால், நல்லவேளையா குண்டாந்தடியை எடுத்துக்காமல், குடத்தில் பிடிச்சு விட்டுவிட்டான். சரிதான் அம்மா, என்னவோ லெக்சர் அடிக்கிறாய், என் புருஷனோடு வாழனும்னு எனக்கு இருக்காதா? . பாட்டிக்கு கடுங்கோபம் வந்துவிட்டது. 'உன்னை அவன் வாழவேண்டாம்னு சொன்னானா? பொறு என்று சொன்னான். அதுவே உனக்குப் பொறுக்க வில்லை. இல்லை; நீங்கள் வாழ்ந்தது எங்களுக்குத் தெரி யாதா? இதுவரை உங்களை அஞ்சு குடித்தனம் வெச்சாச்சு. ஒரோரு சமயமும் அண்டாவிலிருந்து வெஞ்சனப் பெட்டி வரையில் எல்லாம் புதிசு. உன் புருஷன் தன் மனுஷாளோடும் ஒட்ட மாட்டான். நம்மோடும் ஒட்டமாட்டான். நூறு தொழில் தெரியும். ஒண்னும் உருப்படியில்லை. நாலு காசு கையில் கண்டுவிட்டால் தலைகால் தெரியாது. மாடு மத்தி யான்னம் ஆடு அப்பவே, உன்னையும் சொல்லவேண்டாம். தாளிக்கறத்துக்கு, அஞ்சு விரலையும் குவிச்சுப் பொறுக்கிற கடுகை, உள்ளங்கையில் அள்ளிப் போட்டாகணும். ஆறுமாசம் குடித்தனம் என்கிற தடித்தனம். அப்புறம் சொம்பு தவலை மொதக்கொண்டு மார்வாடி கடை. அப்புறம் திடீர்னு ஆள் விலாஸ்மே கிடையாது. ராவோ பகலோ வேளையில்லா வேளையில், கதவிடிக்கிற சப்தம் கேட்டு, கதவைத் திறந்தால், நீ மாத்திரம் உடம்பில் சுற்றின புடவையோடு கையில் கண்ணாடி வளைகூட இல்லாமல், நிக்கறப்போ குரு வயிறு எப்படி கொதிச்சிருக்கும்னு நீ கண்டாயோ? கிழவிக்கு மூச்சுத் திணறிற்று; முகம் சிவந்து வெடித்துவிடும் போல் உப்பிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/27&oldid=1247306" இலிருந்து மீள்விக்கப்பட்டது