பக்கம்:இதழ்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

இதழ்கள்

28 இதழ்கள் இவா என்னவோ பேசிக்கிறாளே, எனக்கொண்னும் புரியல்லையே-ஆனால் நான் வெள்ளை ரோஜா, தங்கப் பாப்பா சிவப்பு ரோஜான்னா இந்தப் பாட்டி என்ன ரோஜா? இப்போ ஒண்னும் ரெண்டு வருஷமா அவர் அப்படி யில்லை! என்று சுந்தரி முனகினாள். அது சரி நீதான் மெச்சிக்கனும். இந்த மட்டுக்கும் லாரி டைவராய் இருக்கானேஎன்று. சுந்தரி உன் புருஷன் உனக்கு உசத்தி; நான் இல்லை யென்கவில்லை. ஆனால் எனக்குப் புளிச்சுப் போச்சு. அப்பப்பா கண்டெடுத்தேன். அம்மம்மா காணாமல் போச்சே என்று இன்னும் எத்தனை தடவை? ஏதோ இந்தத் தடவையும் உன் புருஷன் காணாமல் போகிறப்போ ஆகாசமும் பூமியும் துணை என்று நீ நிக்கக் கூடாதுன்னு; உன்னை விட்டுக் கொடுக்காமல், உன்னோடு நானும் வந்துட்டேனே.ஒழிய எனக்கு நியாயம் தெரியாதா? உனக்குகல்யாணமாகி அஞ்சு வருஷமாச்சு இன்னும் உனக்கு சீர் செய்து ஒயவில்லை. ஒரொரு சமயமும் உன் புருஷன், மளிகைக் கடை, விறகுத் தொட்டி, காப்பி ஹோட்டல், வெற்றிலை பாக்குக் கடை இன்னும் தில்லும் பில்லுமா என் பிள்ளை பேரைச் சொல்லி அங்கும் இங்குமாய் வாங்கி விட்டுப் போன கடனைத் தேடித் தேடி அடைச்சுதான் கடன் பட்டுவிட்டான். ஏதோ என் குழந்தை மானி என்றால், அதற்காக அவன் தலையெழுத்தா? சுந்தரி புன்னகை புரிந்தாள். ‘என்னவோ இன்னிக்கு உன் பேத்தியைக் கண்டதும் உனக்கு உன்பிள்ளை நினைப்பெடுத்துவிட்டது, அவன் கிட்டே இதேசாக்காய்ப் போனாலும் போயிடுவேன்னு சொல்லு. போகத்தான் போறேன். என்னைக் கெளரவமா என் பிள்ளையிடம் சேர்க்கவத்திருக்கும் தெய்வந்தான் என்பேத்தி." 'அம்மா நீ பெரிய சமயவாதி.” இல்லை நியாயவாதி என்று சொல்லு. சுந்தரி, நியாயம் பொது சொத்து, தனி சொத்து இல்லை. நியாயத்தின் தன்மை சமயத்தின் தன்மையைப் பொறுத்தது. ஒரு சமயத்தின் நியாயம் இன்னொரு சமயத்தின் நியாயமாயிருக்கணும்னு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/28&oldid=1247307" இலிருந்து மீள்விக்கப்பட்டது