உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

29

இதழ்கள் 29

அவசியமில்லை. அநியாயமாகவே இருக்கக்கூடும். இந்த உண்மையை அறிந்து சமயத்தோடு நியாயமாய் வளைந்து கொடுத்துப் போகத் தெரியாமல் பிறத்தியாரைக் காரணம் சொல்லிக்கொண்டோ கறுவிக்கொண்டோ எண்ணத்தைத் திருத்திக் கொள்ளாதவர்கள் படும் கஷ்டம் தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக்கிற கஷ்டம்தான். அவர்கள் கஷ்டப் பட்டுக் கொண்டேயிருக்க வேண்டியதுதான். அதுவே அவரவர் எண்ணத்துக்குத் தக்கபடி அவர்களுக்கு ஏற்படும் நியாயம்கூட." - ‘ஏதேது, அம்மா, உன் பிரசங்கத்துக்கு இங்கே ஒரு முழுங்கு பாலுக்குக்கூட வழியில்லையே என்ன செய்வேன்? 'எனக்குப் பாலும் வேண்டாம், தயிரும் வேண்டாம். இந்த வயசில் நாங்கள் ஏங்குவதெல்லாம், எங்கள் வயிறு குளிரும்படி, எங்கள் பெண்டுபிள்ளைகளிடமிருந்து ஒரு அன்பான வார்த்தைக்குத்தான்.” அண்ணாவையும் மன்னியையும் கேட்டதாகச் சொல்லு.” விளக்கேற்றும் வேளைக்கு, பிருகாவின் கையைப் பிடித்த படி நின்று வலது காலை முன் வைத்து வாசற்படி ஏறி வரும் அம்மாவைக் கண்டதும், குருவுக்கு தெய்வமே அவள் உருவத் தில் தன் குழந்தையைத் தன்னிடம் சேர்க்க வந்ததாய்த் தோன்றிற்று. அந்த நினைப்பில் பிருகாவைக்கூட மறந்தான். 'அம்மா! அம்மா!!” அலறியபடி ஓடி வந்து அவள் காலடி யில் மடேரென விழுந்துவிட்டான். கிழவி மகனைத் தூக்கிவிட முயன்றாள். ஆனால், அவளால் சரியாய்க் குனிய முடியவில்லை. படகு மாதிரி சரீரம். அவள் முகம் ஆயிரம் நசுங்கல்கள் கண்டது. என்னவோ ஏதோ என்று எதிர்க்குரல் கொடுத்துக் கொண்டே சின்னா உள்ளிருந்து ஓடிவந்தாள். ஆனால், குரு இன்னும் எழுந்திருக்கவில்லை. அம்மாவின் கால்மேல் பிடியையும் விடவில்லை. அவள் பாதங்கள்ை, தன் கண்களினின்று இழியும் இதழ்களால் அர்ச்சித்துக் கொண் டிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/29&oldid=1247308" இலிருந்து மீள்விக்கப்பட்டது