இதழ்கள்
39
இதழ்கள் 39
ஆனால் இன்று காம்பவுண்டுச் சுவரோரமாய் நிலவொளி யில் ஒரு கை முஷ்டியளவுக்கு ஒரு குண்டு மொக்கு தலையை ஆட்டிக் கொண்டிருந்தது. இருவரும் அவரவர் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தபடி அதையே பார்த்துக் கொண்டிருக்கையில் சின்னக் குழந்தைகள்போல், அவர்கள் தலைகள் இடித்தன. 'அம்மா! அம்மா!' நேர் கீழிருந்து பரிதாபமாய் ஒரு குரல் உயரே மிதந்து வநதது. 'யாரது?” வாசலுக்கெதிரே ஒரு உருவம் நின்றுகொண்டிருந்தது. *ராஜீ இது யார்? எப்படி உள்ளே வந்தா?” - 'அடாடா! நான் கேட்டைப் பூட்ட மறந்துட்டேன்!” "அம்மா பசிக்குது-’ - அவனை அறியாமலே சிரிப்பு வந்து விட்டது. இன் னிக்கு உனக்கு மாத்திரமா பசி?” "அம்மா, குளிர் எடுக்குது. குழந்தையைத் தாங்கிண்டு நிக்கறேன்-’’ அவன் ஏதோ சொல்ல வாயெடுத்தான்; அவன் வாயைக் கையால் பொத்தி அப்படியே அடக்கிவிட்டு ராஜி கிடுகிடு வெனக் கீழே இறங்கிப் போனாள். இருட்டில் அவள் கால் மெட்டி ணக் ணக் கென ஒலித்தது. - வெள்ளத்தில் நீந்தும் கிருமிகள் போலும் சம்பந்தா சம்பந்தமில்லாத எண்ணத் துணுக்குகள் இமைத் திரையில் சுழன்று நீந்தின. "கஜாம்பாள் மொக்குக் கட்டிவிட்டாள். இன்று பஸ்ளில் வெகு அழகாய் அடுக்கிய புஷ்பச்சரம் ஒன்று பார்த்தேன்; அந்தக் கொண்டை போட்டுக்சொள்ள ரொம்ப நாழியாகி யிருக்கும், எல்லாமே சொந்தக் கூந்தலா யிருக்குமா என்ன? நிச்சயமாய்க் சவுரி சேர்ந்திருக்கிறது. இல்லாவிட்டால் நான் காதை யறுத்துக்கிறேன். ஏன் அவளையே கேட்டுட்டால் போறது. அவளும் பேசத் தயாராயிருக்கிறாள். எனக்கு மாய்த் தெரியும். இல்லாவிட்டால் ஒரு நாளைப் பார்த்த