பக்கம்:இதழ்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

43

இதழ்கள் 43

தேன், கிழங்கு மாதிரி பால் உருளி. அதைக் காணோம்! வாசல் கதவை சப்பளிக்கத் திறந்து போட்டிருக்கு நான் என்ன பண்ணுவேன்?” 'நேற்று ராத்திரி விருந்தாளி எங்கே? 'அவளையும் கானோம்!-’ “அதான் கேட்டேன்; எனக்குத் தெரியுமே சம்பந் தியைக் கூப்பிட்டு உபசாரம் பண்ணினே, அவள் தன் சீரை யெடுத்துண்டு போயிட்டா! நீயா கொடுக்கல்லே.” "அந்தப் புடவையை நான் ஒரு தடவைதான் கட்டிண் டேன்- அவளுக்குக் கோபக் கண்ணிர் தளும்பிற்று. 'நான் எதுக்கு இருக்கேன்? கெட்டுப் போனதை யெல்லாம் இட்டு நிரப்பத்தானே! இன்னும் சம்பந்தியம்மா எது மேலே கை வைச்சிருக்கா பார்-” 'இருங்கோ' ராஜி சட்டென அவனைக் கையமர்த் தினாள். ரேழியின் கதவு மூலையிலிருந்து பூனைக்குட்டி கத்து வதுபோல் முனகல்கள் கிளம்பின. அந்தச் சப்தங்கள் அவனுள் தொய்ந்ததும், அந்த அர்த்தோயத்தில் அவன் நெற்றி மேல் செவ்வொளி வீசிற்று. பொட்டு நரம்புகள் வெடித்துவிடுவன போல் புடைத்தெழுந்தன. இரண்டே தாண்டலில் ரேழியை அடைந்தான். அதற்குள் குழந்தை பெருங் குரல் பாய்ச்சி அழ ஆரம்பித்துவிட்டது. ரோஜி சம்பந்தியம்மாளைக் கோவிச்சுக்காதே. எதிர் சீர் பண்ணிட்டுத்தான் போயிருக்கா.” அவள் சாவதானமாய் அவள் பின்னால் வந்து நின்றாள். திகைப் பூண்டு மிதித்தவளாய்ப் பார்வை குழந்தை மேலேயே வெறித்துவிட்டது. கைகளையும் கால்களையும் உதைத்துக் கொண்டு பிடாரிக் கத்தலாய் அது அழுதது. பூவின் தடுத் தண்டு போல் செவ்வாயில் தளிர் நாக்கு நடுங்கிற்று. ராஜி குனிந்து குழந்தையைத் தொட்டாள். விரலடியில் சதை அழுந்தியது. ராஜி அப்படியே குழந்தையை வா கொண்டாள். அவள் மார்பின் குமிழ்கள் திடீரெனப் பொங்: னாற்போல் அவனுக்குத் தோன்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/43&oldid=1247322" இலிருந்து மீள்விக்கப்பட்டது