இதழ்கள்
53
இதழ்கள் 53
தர்க்கம் இன்னதென்று புரியவில்லை. ஆனால் இதென்ன சுத்த அழுமூஞ்சி அம்மா சதா தானும் அழுதுகொண்டு பிறத்தி யாரையும் கஷ்டப்படுத்திக்கொண்டு அவன் கை அவனை அறியாமலே அப்பா. கையை நாடி, விரல்கள் பின்னிக் கொண்டன. "உஷ் குழந்தை பயப்படுகிறான்.” ஆனால் அவள் அழுகை இன்னும் ஒரு குரல் உயர்ந்தது. “இத்தோடு உன் அழகான பாட்டை நிறுத்திக்கொள்ள் வாம் என்து நினைக்கிறேன்.” அவள் கப்பென்று அடங்கினாள். அவன் அந்தக் குரலை. உபயோகிக்கையில் அதற்குக் கீழ்ப்படிதல் தவிர வேறு படி இல்லை. நடு முதுகுள் பனிச்சில் பாம்பு போல் வழிந்தது. விழிகள் மருட்சியுடன் அவனை நோக்கின. - போய் மூஞ்சியை அலம்பிக்கொண்டு வா; சகிக்க வில்லை!’ அவள் அவ்விடம் விட்டு அகன்றதும் பையன் ரகசிய மாய், "இப்படித்தான் அப்பா, நீ வருவதற்கு முன்னாலிருந்து அழுது கொண்டே இருக்கிறாள், அம்மாவுக்கு என்ன அப்பா, உடம்பு சரி இல்லையா?” என்றான். 'உடம்பு எல்லாம் சரியாய்த்தான் இருக்கிறது.” வார்த் தைகள் யோசனையாய் இழுத்துக்கொண்டு வந்தன. "பின்னே ஏன் அப்பா அழுகிறாள்?’ அப்பா அவன் தோள்மேல் கை போட்டுக்கொண்டார். "கண்ணா, உனக்கு ஒன்று சொல்லப்போகிறேன். இந்த அகத்துக்கு ஓர் அம்பிப் பாப்பா பிறக்கப் போகிறான்.” பையன் சற்று நேரம் சும்மா இருந்தான். சொன்னதை வாங்கிக்கொண்டு வாங்கினதைப் புரிந்துகொள்ளும் நேரம். 'பிறக்கப் போகிறதென்றால் அழவேணுமா? செத்தால் தானே அழுவார்கள்? அவன் உதட்டோரங்களில் ஒளி படர்ந்தது. "அப்படியார் உனக்குச்சொல்லிக் கொடுத்தது?" 'இல்லை அப்பா, அன்றைக்கு ஒரு பையன் வி:ை வரவில்லை. இரண்டு நாள்சுழித்துவந்தான் ஏண்டர்