பக்கம்:இதழ்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

55

 இதழ்கள் 55

"நிஜமான சாவோ, பிறப்போ-ஆன்ால் ஏதாவது ஒன்று தான் உண்டு; ஒன்று இருந்தால் மற்றொன்று இல்லை.” பையனின் புருவங்கள் அப்பா சொல்வதன் அர்த்தச்சுமை தாங்காது தவித்தன. 'அப்பா, ஒரு பையன் சொன்னான்; செத்துப் போன வர்கள் பிறந்துகொண்டே இருப்பார்களாமே! பிறக்கிறதற் கும் காத்துக்கொண்டே இருப்பார்களாம். அப்போது அவர் களுக்குக் கஷ்டமாய் இருக்காது? பசிக்காது? குளிராது? "உயிரோடிருந்தால் மாத்திரம் என்ன? பசிக்கவில்லையா, குளிரவில்லையா? எத்தனையோ பசிகள், எத்தன்ையோ குளிர் கள். பிறந்தவர்களும் செத்துப்போகக் காத்துக்கொண் டிருக்கிறவர்கள்தாம்,' - "அப்படியானால் அப்பா, ஏன் பிறக்கவேணும்? ஏன் சாகவேனும்?” - -- க்விக்! க்விக்! க்விக்!!’ வானவெளியில் மாறிக்கொண்டே இருக்கும் கருமையில் ஒற்றைப் பட்சி திசை தப்பிப் பறந்தது, தன் கேள்விக்குப் பதிலைத் தேடிக்கொண்டு. "அப்பா, செத்துப் போகிறது என்றால் என்ன? பிறக் கிறது என்றால் என்ன?” கண்ணா, நீ தூங்குகிறாய் என்றால் என்ன, விழித்திருக் கிறாய் என்றால் என்ன? பையன் களுக்கென்று சிரித்தான். என்ன் அப்பா நான் உன்னைக் கேட்டால் நீ என்னைக் கேட்கிறாயே? இதைத்தான் நான் அம்மாவைக் கேட்டேன், அதிலிருந்து தான் ஆரம்பித்தது,' ఫ్ట!' உஷ்-அம்மா வருகிறாள்!” பின்கட்டிலிருந்து அவள் வெளிப்பட்டாள். .ெ கன்னங்களும் சந்தன வெண்மையில் اشتا களில் மயிர்ச் சுருள்கள் ஈரத்தில் கன்னங்களோடு கொண்டிருந்தன.வெள்ளை விழிமேட்டில் செந்நரம் களின் நடுவில் சாறு ஒடும் கருவிழிகள் உட்கார்ந்திருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/55&oldid=1247153" இலிருந்து மீள்விக்கப்பட்டது