உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

இதழ்கள்

శ్రీక్ష இதழ்கள் அவன் அவர்கள் பக்கம் கண்னெடுத்துக்கூடப் பார்க்க வில்லை. கூடத்துக்கும் சமையலறைக்கும் காரியமாய் விடு விடென அலைந்தாள். கால்மெட்டிகள் கோபத்துடன் ணக் னக் என்றன. அவன் கண்கள் அவள் தோல் வளைவுகளையும் இடுப்பி லிருந்து அகன்று வளைந்த உருவக்கோடுகளுள் வேகமாய்க் குழையும் அங்க அசைவுகளையும் விழுங்கின. அவனில் ஒரு பாதி பிரிந்து அவளோடு இணைந்தது. ஊஞ்சலில் உட்கார்ந் திருந்த குறைநிலை அவளையும் அவளோடு இணைந்த மறு பாதியையும் கவனித்துத் தவித்தது. சுவாமி விளக்கை ஏற்றுகிறாள். குச்சியிலிருந்து சுடர் சீறிக் குதித்து விளக்குத் திரிக்குத் தாவுகிறது. விளக்கெதிரில் விழுந்து அவள் சேவிக்கையில் அவளைக் கவ்வினாற் போலேயே அவ்ன் நிழலும் அவள் உருவக் கோட்டுடன் குனிகிறது. பெருவிளக்கில் அகல் விளக்கை ஏற்றிக்கொண்டு அவன் பக்கமாய் முற்றத்தை நோக்கி வருகிறாள். ஊஞ்சல் சங் கிலியை உராய்ந்து அவள் கன்னத்தைத் தொட அவன் கைகள் துடித்தன, சுடரை அணைத்த விரல் சந்துகளில் குங்குமச் சாறு போல் ஒளி வழிகின்றது. அவள் எங்கோ வெகு தூரத்தின் விளிம்போரத்தில் பாடு கிறாள். துளசி மாடத்தில் விளக்கை வைத்துவிட்டு நமஸ் கரித்து எழுகையில், அவளைச் சூழ்ந்த இருளில் மாடத்தில் அழும் அகல் சுடர் அவள் முகத்தை ஏற்றுகையில், மூக்குத்தி களிலிருந்து நீல மின்னல்கள் கொடி பின்னிக்கொண்டே பிறந்து அவன் உடலை ஊடுருவின. அவள் புருவங்களிடைக் குங்குமப் பொட்டிலிருந்து ஒரு கண் திறந்தது. அவன் உடல் புல்லரித்தது. அவள் அவனை நோக்கி வந்தாள். துளசி மாடத்து விளக்குச் சுடரில் குளித்துவிட்டு, அதனின்றே வெளிப்பட்டுச் சகிக்க முடியாத தூய்மையுடன் அவனை நோக்கி வருகையில் அடிவயிற்றில் அலைகள் சுருண்டு சுருண்டு தொண்டை வரை யில் எழுந்து உள் வீழ்கையில் வேகத்தாளாது உடல் தவித்தது. அவுள் கிட்ட வந்து ஊஞ்சலடியில் உட்கார்ந்து அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/56&oldid=1247154" இலிருந்து மீள்விக்கப்பட்டது