பக்கம்:இதழ்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

75

இதழ்கள் #5

நினைத்துக்கொண்டு கண்ணைக் கொத்திவிட்டுப் போய் விட்டது.” & ** "ஓ! சொல்கிற கதையில் அதற்குமேல் என்ன சொல்ல முடிகிறது? ""கிட்டுக் கட்டி மருந்தில் மயங்கிக் கிடக்கும் மகனின் இரு பக்கத்திலும் இருவரும் நின்றுகொண்டிருந்தனர். அழுது அழுது அவள் முகம் வீங்கிவிட்டது. அவன் தலை குனிந்தான். அவனால் அவளைக் கண்ணெடுத்துப் பார்க்க முடியவில்லை. 'சொல்லாத வார்த்தைகளில் மெளனம் சமுத்திரமாய்க் கடைந்து கண்ணுக்குத் தெரியாத பொறிகள் எழும்பிப் பறந்து இருவரையும் ஊடுருவின. இதயங்களில் முள் முள்ளாய்த் தைத்துப் புதைந்து தகித்தன. 'அவளுக்குத் தாங்க முடியவில்லை. முன்றானையை வாயுள் திணித்துக்கொண்டு அறையைவிட்டு ஓடினாள். அவன் அவள் பின்னால் சென்றான். வாசலுக்கு வெளியே அவள் கீழே விழுந்து புரண்டு அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு அம்பு பட்ட மாதிரி துடித்துக் கொண்டிருந்தாள். “அவன் அவள்மேல் குனிந்தான். அவள் சீறி, அவன் கையை உதறித் தள்ளினாள். அவள் விழிகள் முகத்தைவிட்டு வெளிவந்து விடும்போல் பிதுங்கின. பெரிய கருவிழிகள், செந்நரம்புக் கொடிகளின் நடுவில் சுழன்றுவிட்டாற்போல் நடுங்கின. 'அவளைப் பார்த்துக்கொண்டு மெளனமாய் நின்றான். அவன் கண்கள் ஆறாய்ப் பெருகின.

    • ஆனால், அழுதாலும் எத்தனை நாள் அழ முடியும்? கண்ணிர் வறண்டபின்?”

கண்ணிர் வறண்டபின் மெளனம். வறண்ட காலி மெளனம். எவ்வளவுக்கு எவ்வளவு மூர்க்கமாய் அழுகை உடலை அலைத்ததோ, அவ்வளவுக்கு அவ்வளவு ஓய்ந்த மோனம் கவ்வி அழுத்திற்று, விரிந்து அகன்ற பெரிய பாலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/75&oldid=1247173" இலிருந்து மீள்விக்கப்பட்டது