பக்கம்:இதழ்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

இதழ்கள்

76 இதழ்கள் மோனம் வலியிலும் ஜூர வேகத்திலும் வீரிடும் குழந்தையின் விரல்கூட அந்த மோனத்தைக் கலைக்கமுடியவில்லை. பெரிய கழுகுபோல் இருவர் மேலும்,மெளனம். தன் அகன்ற இருள் சிறகுகளை விரித்துக்கொண்டு காத்திருந்தது. 'ஒருவருக்கொருவர் திசை தப்பிப் போனபின் அவன் கண்கள் சதா திசை தேடி அலைந்தன, அவன் கண்களில் தீராத கேள்வி குடிகொண்டது. “நான் துரங்கிக்கொண்டிருக்கிறேனா, விழித்துக்கொண் டிருக்கிறேனா?” . 'வாசலுக்கு வாசல் எதையோ பறிகொடுத்துவிட்டவன் போல் தயங்கித் தயங்கி நின்றான். இந்த வீடு இவ்வளவு பெரிய காடா என்ன? இதுவரை எப்படித் தெரியாமல் இருந்தது? குழந்தையும் அவளும் இருக்கும் அறையுள் எடுத்து வைக்கக் கால் அஞ்சிற்று. வாசலுக்கு இந்தண்டையே நின்றான். 'கட்டுக் கட்டிய கண்களுடன் குழந்தை அவள் மடியில் கிடந்தது. காங்கையடிக்கும் அவள் கண்கள் காலியாக இருந்தன. மயிர் பழுப்பேறிப் புழுதி படிந்திருந்தது. மார்புத் துணி நழுவியதோ, ரவிக்கை முடிச்சு அவிழ்த்திருப்பதோ அவள் அறியாள். அவள் பைத்தியமா? யோகினியா?” "அவன் விழியோரங்களில் முட்கள் பிடுங்கின.

  • கணிக்கை பிடுங்கியது ஒரு கண்ணே யானாலும் அந்த அதிர்ச்சி மறு கண்ணையும் தாக்கிவிட்டது. ஆகையால் இரண்டு கண்களுமே பாதிக்கப்பட்டுவிட்டன என்று வைத்தி யர்கள் கூறிவிட்டனர்.

'அவன் மாடிப் படிக்கட்டின் வளைவில் சிறை கிடந்தான், அவள் இருக்கும் அறைக் கதவு மெதுவாய்த் திறந்தது. அவள் தள்ளாடி நடந்து வந்து கூடத்தில் நின்றாள். அவள் முகம் அண்ணாந்து மெதுவாய்க் கூடத்தின் மூன்று பக்கங்களிலும் திரும்பிற்று. அவளுந்தான் எதையோ தேடிக் கொண்டிருந் தாள். தன்னையா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/76&oldid=1247174" இலிருந்து மீள்விக்கப்பட்டது