88
இதழ்கள்
శ్రీ இதழ்கள் தெரிஞ்சுது. நல்ல வேளையாய் இன்னொரு அலை இடை கடைந்து எழுந்து, அந்தச் சுழலிலிருந்து அவனைப் பிடுங்கித் தன்னோடு இழுத்து வந்து அப்படியே மணலில் ஓங்கிக் குப்புற அறைந்தது. பெத்தேன் புளைக்சோன்னு’ ஒடி வந்துவிட் டான். ஆனால், அந்தப் பொறி நேரம்-சுள்ளெறும்புக்குக் கண் எம்மாத்தம், அம்மாத்த நேரம், கையும் காலும் பூமியை தொடத்துழாவியபோது நெஞ்சு தவித்த தவிப்பு இப்பொழுது தவித்தது. முன் பின் புரியாத திகில். அவள் அப்படியே குப்புறப் புரண்டாள். பின்னே என்ன இருக்குது எனக்கு இந்த வீட்டிலே? அடி, வெட்டு, குத்து, உதை இதுதானே? திருவொத்தியூரிலே திருட்டுச் சாராயம் காச்சிக் குடிச்சுட்டு வந்து, திமிதிமின்னு என்னை திமிக்கிறது. சண்டைக்கிஸ்து, கையில் கண்டதை யெடுத்து மொத்த வேண்டீது; சந்தோலம் வந்தா அதுக்கு மேலே வந்திருச்சு உசிருக்கே ஆபத்து இன்னிப் பொளுது எப்படியோன்னு எப்பவும் வவுத்திலே உலையைக் கட்டிட்டு இதென்ன பொளைப்பு? சே, அலுத்துப் போரிச்சு அலுத்துப் போரிச்சுன்னா போரிச்சு!’ 'திரும்பும்மா என்னைப் பாரம்மா,’-அவளைத் திரும்ப முயன்றான். "என்னே விட்டுடு.” 'அம்மா-’ “என்னை விட்டுடுன்னா விட்டுடு, சொல்றேன்.” "அப்பன் நல்ல மனசு அம்மா.’ 'நல்லதாயிருந்தா நீயே வெல்லமா நினைச்சுக் கடிச்சுத் துண்னுக்கோ.” "கட்டை மரத்துலே என்னைக் கூட்டிப் போறேன்னு சொல்லிருக்குது-" - "ஆமாம், தான் போய்க் கடலைத் துரு வாரியாச்சு, உன்னைக் கூட்டிப் போறானாக்கும்!” “என்னம்மா சொல்றே? புரியுதில்லியே!” புரியாது புரியாது; புரியுமா?’ என்று கறுவினாள். 'மறுபடியும் பாரேன்'