பக்கம்:இதழ்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

இதழ்கள்

#} இதழ்கள் தலிந்த தேகம். அதுவும் இப்பொழுது முதுகோடு ஒட்டிப் போன நீண்டு குறுகிய வயிறு. கோவணம் பின்னால் வால் நீண்டு தொங்கி ஆடிற்று. உடல் குலுங்க அவனைப் தொடர்ந்து அவள் ஓடுகையில், அவளுக்குத் திடீரென அவள் ஊர் சரியான பட்டிக்காடு. அதுவும் அவளைப் இ ர்களின் குடிசை ஒரு மூங்கில் காட்டின் விளிம்பிலேயே நின்றது. அங்குப் பகல் வேளையிலேயே பாம்புகள் நடை வழியில் படுத்துறங்கும். மரக்கிளைகளிலிருந்து தொங்கி அம்மாதிரி இடத்தில் ஒரு சமயம் நள்ளிரவில் ஜல உபா தையைத் தீர்த்துக் கொள்ள வெளியே வர நேர்ந்தது. அன்று முழு நிலா: பட்டை வீறிட்டுக் கொண்டிருந்தது. காற்றின் வில் பரங்கள் மெல்லிய பெருமூச் செறிந்தன. இலை நிழல்கள் தரைமேல் இட்ட கோலங்கள் நடுங்கி ப்பொழுது நாலுகால் பாய்ச்சலில் ஒரு உருவம் காட்டு வெளியில் ஓடுவதைக் கண்டாள். முகம் புரியவில்லை. கால்கள் பாய்க்சலில் பூமிக்கு மூன்று விரல்கடை உயரத்தில் அந்தரத் தில் நீந்தின. அடர்ந்த வால் பின்னால் நெட்டையாய் விறைத் துக் கொண்டிருந்தது. அது எங்கே அவ்வளவு வேகமாய், அவ் வளவு காரியமாய்ப் போய்க் கொண்டிருந்தது? தெரியவில்லை, ஆனால் அது வேட்டைமேல் இல்லை. அப்படியும்ஏன் அவளுக் குத் தோன்றிற்று என்று கேட்டால், அவளுக்குச் சொல்லத் தெரியாது. அது என்ன நாயா, நரியா, ஓனாய் என்று சொல்றாங்களே, அதுவா? இந்த உலகத்திலிருக்கிற எந்த நாலு கால் ஜாதியிலும் சேர்த்ததாகத் தெரியவில்லை. அதைப் க்கையிலேயே, அவளுக்கு இதுவரை ஒருவரும் பார்த் திராத, பார்க்கக் கூடாததைப் பார்த்து விட்டாற் போன்ற ஒரு பயத்தில் முதுகுத்தண்டு சில்லிட்டது. அது அவளைப் பார்க்கவில்லை. அது எதையுமே பார்க்கவில்லை. தான் ஏதோ ஒரு குறிப்பிட்ட வேளைக்கு முடிக்க வேண்டிய ஏதோ ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/90&oldid=1247188" இலிருந்து மீள்விக்கப்பட்டது