பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பீமன் வல்லபம். 99 தொடர்பவனிருக்கின்ருன். எனக்கு விருப்பமில்லாக இம் மொழிகளை நீ பேசாதே; இப்போதே இவ்விடத்தினின்றும் நீங்கிப்போய்விடு.” என்று சொன்னன். அதற்கு இடிம்பி, 'வீரரே ! உம் தாயாருடன் சகோதரர்களையும் எழுப்பும்; வேறிடம் கொண்டுபோய் உங்களைக் காப்பாற்றுகின்றேன்; சிறிது நேரம் தாழ்த்தால் இடிம்பன் வந்துவிடுவான்' என்ருள். பீமன் அதுகேட்டு, 'இடிம்பியே களேப்பினுல் நல்ல கித்திரை செய்கிறவர்களே எழுப்புதல் கூடாது; நீ இவ்விடத்தில் நிற்கவேண்டாம் வேண்டுமாளுல் உன் கமை யனே இங்கு அனுப்பு; முடிந்தால் அவன் எங்களே உண வாகக் கொள்ளட்டும்' என்று சொன்னன். இங்கனம் இவர்களிருவரும் உரையாடிக் கொண்டிருக் குங்கால், இடிம்பன், இடிம்பி போய் நீண்டநேரமாயிற்றே இன்னும் வராத காரணமென்ன? என்று கோபங்கொண்டு, பாண்டவர்களும் இடிம்பியும் இருக்கும் இடத்திற்கு விரைந்து வர்தான். அப்போது இடிம்பி, தன் தமையன் கோபத்துடன் வருவதைப் பார்த்து, பீமனை நோக்கி 'வீரரே, தாபகனியாகிய இடிம்பன் இதோ வந்துவிட் டான்; இனி நீங்கள் அவனே விட்டுத் தப்பிப்பிழைப்ப தரிது; உம் சகோதரர்களும் தாயும் இரையானுலும் உம்மை மட்டுமாவது தப்புவிக்கின்றேன்; என் ஒக்கலில் உட்கார்ந்து கொள்ளும்; தாக்கிக்கொண்டு ஆகாயமார்க்கமாய்ப் போய் விடுகிறேன்” என்று சொன்ஞள். - பீமன், "பேதையே! உன்னுல் நான் காப்பாற்றப்பட வேண்டியதில்லை; அவன் இங்கேவாட்டும்; ஒரே அறையில் அவனே யமலோகத்துக்கு அனுப்பிவிடுகின்றேன்' என்று சொல்லி இடிம்பகுேடு