பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


யயாதி காபதி. 9 பெருங்கவலையுள் மூழ்கியிருக்கின்ருர்" என்று சொன்னுள். தெய்வயானே, மனக்கொதிப்புடன் நடந்தவையெல்லாம் சொல்லி, தாதியே! இனி விடயபருவாவின் நகரத்துக்குள் நான் அடியிடமாட்டேன்; இதனை என் தந்தையாருக்குத் தெரிவிப்பாயாக’ என்று கூறிஞள். தாதியும் அக்கணமே போய்ச் சுக்கிாரிடம் செய்திகளைத் தெரிவித்தாள். இதனேக் கேட்டமாத்திரத்தில் சுக்கிார் மிக்க துக்க மும் கோபமுங்கொண்டு, பெண்ணைத்தேடி விரைவாக வந்து மகளைக்கண்டு இரண்டுகைகளாலும் தழுவிக்கொண்டு, செல் வியே! நீ ஏன் அந்தத்துஷ்டையாகிய சன்மிஷ்டையோடு சேர்ந்து சென்ருய்? உலகத்தில் ஒருவர்க்கு இன்பமும்துன் பமும் உண்டாவது அவரவரது குற்றங்களாலும், குணங்களா அமேயாம்; உனக்கு இங்ஙனம் நேர்ந்தது சேரத்தகாதவர்க ளோடு சேர்ந்த குற்றத்துக்குப் பரிகாரமாகத்தான் என்றே கருதுகின்றேன்' என்று மனவருத்தத்துடன் கூறினர். தெய்வயானை அது கேட்டு, இப்படி எனக்கு நேர்ந்தது என் குற்றத்துக்குப் பரிகாரமாகவே யிருக்கட்டும்; ஆனல் அவளுரைத்த பழிமொழிகளைக் கேளுங்கள்;அவை,நெஞ்சை கஞ்சுபோற் சுடுகின்றன; விேர் எப்போதும் அசுரர்களே வக் திபோல் வந்தித்துத் துதிக்கின் மீதாம் நீர் அவர்கள் கொடுக் கும் பிச்சையை இச்சித்துக் கையேந்தி வாங்குகின்றீராம். இவையெல்லாம் உண்மையா? அவள் என்னேப்பார்த்து இக் கடுஞ்சொற்களை ஒருமுறையல்ல; பல முறை சொன்னுள். அதுவும் போதாதென்று கிணற்றிலும் தள்ளிவிட்டாளே”. என்று கண்ணிரும்கம்பலையுமாய்ச் சொல்லிவருந்தி கின்ருள்.