பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யயாதி நரபதி. }; o மகிழ்ச்சியுடன் சொன்னுள். அதன் மேல் யாவரும் தத்தம் இருப்பிடம் ஏகினர். இங்ங்னம் சன்மிஷ்டையைத் தாதியாகப் பெற்ற தெய்வயானை, சின்னுள் சென்ற பிறகு, ஒரு நாள் சன்மிஷ் டையோடும் மற்ற தாதிகளோடும் விளையாடுதற்கு, முன்பு போன அந்த வனத்துக்குச் சென்ருள். அங்குச் சென்று, ஆயங்களோடு இளமரச் சோலைகளிற் புகுந்து தளிர் கொய் தும், மலர் கொய்தும், கண்ணிகள் கட்டியும், மாலைகள் கொடுத்தும் கூந்தல்களிற் சூடி, மயிலோடு ஆடியும், குயி லோடு பாடியும், கிஞ்சுகத்தோடு கொஞ்சியும், பூங்கொடி ஊஞ்சல் புரிந்து விளையாடிக் களித்தும், வாவி படிந்து எழுந்து வண்ணப் பட்டாடைகள் கரித்தும் கடாகக் கரை யின் தண்மா நீழலில் ஒர் மரகதப் பாறையில் இட்ட ஆச னத்தில் தாரகை நடுவண் கண்மதி போலத் காதியர் புடை சூழப் புன்னகையோடு நன்னயமாக அமர்ந்திருந்தாள். இச்சமயத்தில் யயாதி மன்னன், தனது படை புடை சூழ வேட்டை வயத்களுய் அக்காட்டிற்கு வந்தவன், வேட்டை மிருகங்களைத் தேடி விடாய்த்து, வில்லுங் கையு மாய்த் தெய்வயானை முதலியோர் விற்றிருக்கும் சோலையை அடைந்தான். அடைந்தவன், ஒர் கழை செறிந்த கண் மர நீழலில் மந்தகாசத்துடன் உட்கார்ந்திருக்கும் தெய்வ யானையையும், சிறிது காழ்ந்த ஆசனத்திலிரு யானேயின் சீறடிகளைப் பிடித்துக்கொண்டிருக்கும் சன்மிஷ் டையையும், எனைய தாதியர் கூட்டத்தையும் கண்டு அம்மா