பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 இதிகாசக் கதாவாசகம், 'சுக்கிரர் புத்திரியே! நானே அரசன்; நீயோ அந்தண குலப் பெண்; நம் மிருவர்க்கும் மணம் எங்கனம் பொருங் தும்?’ என்று கேட்டான். தெய்வயானை: அரசே! rத்திரிய குலத்தையும் பிராமண குலத்தையும் சூட்சுமமாய் ஆராய்க்தால் இரு குலத்துக்கும் ஏற்றத் தாழ்வு அதிகமில்லை” என்ருள். யயாதி. திரும்பவும், நான்கு வருணத்திலும் பிரா மண வருணம் மேலானது ஆதலாம் கூடாது” என்ருன். தெய்வயானை: “அரசே! நீர் திரும்பத் திரும்பப் பழம் பாடமே படிக்கின்றீர்; நம்மிருவர்க்கும் பாணிக் கிரகணம் முன்னமே நடந்திருக்கிறதென்பதனை மறந்தேதான் நீர் இங்கினம் பேசுகின்றீரென்று கினைக்கின்றேன். எவராலும் தீண்டப் பெருத என் காத்தை நீர் முன்பு தீண்டியதை மறத்திரோ? உம்மால் பிடிக்கப்பட்ட என் கைகள், வேருெரு ஆடவனுல் தீண்டப் படுமோ?” என்று முன் நடந்த வரலாற்றை மெதுவாகத் தெரிவித்தாள். இவற்றை யெல்லாம் கேட்ட யயாதி, மறுக்கமுடியாது ஒருவாறு உடன்பட்டு, "தெய்வயானே! உனது தந்தையோ சாபானுக்கிரக சக்தி வாய்ந்தவர்; அவரது உடன்பாடில் லாமல், உன்னே மணந்தால், அவரது கோபத்துக்கு தான் ஆளாகவேண்டுமே, 'குணமேன்னும் குன்றேறி நின்றர் வெகுளி, கணமேயும் காத்த லரிது’ என்றபடி அவரது கடுஞ் சினத்தைக் கணப் பொழுதும் என்னல் தாங்கமுடியாது