பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 இதிகாசக் கதாவாசகம். வாசுப் பதவியினின்றும் இறக்கிவிடுதல் முடியாது; நகர மாந்தர்களெல்லாம் அவனே தங்கட்கு அரசனுய்வரவேண்டு மெனப் போவாவுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்; மந்திரி மாரும் சேனுபதிகளும் உதிட்டிரனிடத்தில் போபிமான முள்ளவர்களாயிருக்கிருர்கள்; பீஷ்மர், துரோணர், விது ான், கிருபர் முதலிய பெரியோரெல்லாம் உதிட்டிரனிடத் தில் மாருத அன்புள்ளவர்கள்; விஷயம் இங்ஙனமிருப்ப தால் உதிட்டிானைப் பட்டத்தினின்றும் நீக்குவதும், அதனே உனக்கு ஆக்குவதும் சிறிதும் இயலாத காரியம்; இம்முறை யிலிருந்தும் நான் பிறழ்ந்தால் நமக்கு உலகோர்பழியும், அழிவும் வருவது திண்ணம்; இத்தகைய இடர்ப் பாடுக விருக்கும் இக் காரியத்தில் உண்தெண்ணம் எவ்வாறு ஈடேறும்? ஈடேறுதற்குரிய உபாயந்தான் என்ன இருக் கின்றது?’ என்று துரியோதனனது கருத்துக்கிசையாது. கூறினன். துரியோதனன் கேட்டு தங்தையே! தாங்கள் உதிட்டிரனுக்குப் பலருடைய அபிமானமும் துணையும் சாலவும் உள்ளதாகக் குறிப்பிட்டீர்கள்; நம் பக்கவில் என்ன? ஒருவருமில்லையா? சதியாலோசனையிற் சிறந்த சகுனியும்; வண்மையில் மிக்க கன்னனும் எனக்கு ஆருயிர் த்துணைவர்களாக விளங்குகிரு.ர்கள்; பீஷ்மரோ ஒரு பெருங் துறவி, அவர் ஒருவர் பக்கமும் சேசார்; அசுவத்தாமா என் மீது கிரம்பிய பrமுடையவர்; ஆதலால் அவரது தந்தை துரோணர், நம்மை விட்டுப் பாண்டவர் பக்கம் சோார்; இவர்களைப் பார்த்துக் கிருபரும் நம்மை விட்டக லார்; விதுரர் ஒருவருமே எதிரிகளான பாண்டவரிடம் அக் தாங்க நேயமுடையவராயிருக்கின்ருர்; இருப்பினும் அவர் நம்முடன் வெளிப்படையில் எதிர்த்து ஒரு காரியமும்