பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

ளில் பதித்திருக்கும் முத்திரைகள் அச்சிற்ப உருவங்களுக்கே ஒரு தனிச்சிறப்பைக் கொடுக்கின்றன. இலக்கியமும், இசையும், நடனமும் நாட்டியமும் இத்தகைய சிற்ப உருவங்களால்தான் நிலைபெற்றிருக்கின்றன.

மண்ணையும், விண்ணையும், மக்களையும், மாக்களையும், அறிஞனையும், தெய்வத்தையும், மனிதனையும், பெண்ணையும் விஷயங்களாக அமைத்தே இந்தச் சிற்பி தன்னுடைய அதி அற்புதமான சிற்ப உருவங்களை நிர்மாணித்திருக்கிறான். அப்படி அவன் உருவாக்குவதற்கு இலக்கியங்களும், இதிகாசங்களும், சரித்திரங்களும் ஆகமங்களும் துணை புரிந்திருக்கின்றன. கலை உணர்ச்சி நிறைந்த கண் படைத்த சிற்பிகளின் உள்ளத்தில் உருவான சிற்பங்களே இன்று நம் நாட்டில் எங்கு பார்த்தாலும் காட்சி அளிக்கின்றன. இந்தச் சிற்பிகள் கல்லால் இழைத்த காவியங்களே நமது கோயில்கள், அங்குள்ள மூர்த்திகள். அந்த மூர்த்திகளின் முன் நாம் தலை வணங்குகிறோம். அதன் மூலமாக அந்தத் தெய்வீகச் சிற்பிகளுக்குமே நாம் வணக்கம் செலுத்துகிறோம்!

108