பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

கற்பூர ஆரத்தியைக் கண்டு களிப்போம். இறைவன் திருக்கோலத்தில் ஈடுபட்டு நின்று திரும்பி வீடு வந்து சேர்வோம். இப்படியெல்லாம் கோயிலுக்குப் போய் வரும் நாம் விழித்த கண் விழித்தபடியே நடந்தாலும் கோயிலின் அமைப்பை உற்று நோக்கமாட்டோம். அங்குள்ள கலைச் செல்வங்களைக் கண்டு களிக்கமாட்டோம். சிற்ப வேலைப்பாடுகளைக் கண்டு அதிசயித்து நிற்கமாட்டோம்: பழநி அன்பரைப்போல் இறைவனிடம் பக்தி செலுத்தும் ஒரே ஆர்வத்தோடே வந்து வணங்கிச் சென்று திரும்பி விடுவோம். இரண்டாயிரம் வருஷ காலமாக ஊறி நிற்கும் பண்பாட்டில் வளர்ந்துள்ள கோயில்களுக்குச் சென்றால், அந்தக் கோயில் அமைப்பு எப்படி இருக்கிறது; அங்கு என்ன என்ன மூர்த்திகளை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்; கோயிலின் மண்டபங்கள், விமானங்கள், ஸ்தூபிகள், தூண்கள் எல்லாம் எக்காலத்தில் யாரால் கட்டப்பட்டிருக்க வேண்டும்; அவை சொல்லும் கதைகள் என்ன என்றெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? தமிழர்களாகிய நாமெல்லாம் கோயில்களின் அமைப்பிலும் அவை வளர்த்த பண்பாட்டிலும் அக்கறை காட்டவே இந்தப் பேச்சுத் தொடர். குடைவரைக் கோயில்கள் தவிர மற்றைய கோயில்களைப் பற்றியே இன்றைய பேச்சு.

பல்லவ மன்னர்களான மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் முதலியோர் மலைகளைக் குடைந்தும், பெரும் பாறைகளை வெட்டிச் செதுக்கியும் குடைவரைகளை அமைத்தார்கள் என்று கண்டோம். அவர்கள் வாழ்ந்த அதே ஏழாம் நூற்றாண்டின் இறுதியில், கருங்கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி

141