பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

டம், களம் கர்ணம் எனப்படும் கழுத்து. இதன்மேலே இருக்கும் ஸ்தூபியே முடி. இவைள் எல்லாம் என்ன என்ன அளவில் இருக்க வேண்டும் என்பதற்கெல்லாம் விதிகள் உண்டு.

இன்னும் இந்த உறுப்புகளை ஒட்டிய பல பகுதி கள் பல பெயர்களில் விளங்கும். திருஉண்ணாழி என்னும் கருவறைச் சுவரின் வெளிப் பக்கத்திலே கோஷ்ட பஞ்சரம், கும்ப பஞ்சரம் எனும் மாடக் குழிகள் அமைக்கப்படும். கருவறை, அர்த்தமண்டபம் இரண்டையும் சுற்றி ஐந்து கோஷ்ட பஞ்சரங்கள். இவைகளில் கணபதி, தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை உருவங்கள் இருக்கும். கோஷ்ட பஞ்சரத்திலே இந்தத் தெய்வத்திருஉருவங்களை அமைக்கும் வழக்கம் சோழ மன்னர்கள் காலத்திலேதான் ஆரம்பித்திருக்க வேண்டும். கோஷ்ட பஞ்சரங்களுக்கு இடையிடையே கும்ப பஞ்சரம். அடியில் குடமும் மேலே சிற்ப வேலையோடு கூடிய கொடியும் இருக்கும், தோள் என்னும் பிரஸ்தாரத்தின் மேலே கர்ணக் கூடு பஞ்சரம். சாலை என்னும் உறுப்புகள், இவைகளின் அமைப்பை எல்லாம் விவரிப்பதைவிட கோயிலுக்குச் செல்லும்போது நேரே பார்த்துத் தெரிந்து கொள்ளுதல் நலம்.

கோயிலுக்குள் இருக்கும் மற்ற பரிவார ஆலயங்களைப் பற்றியும் ஒரு சில வார்த்தைகள், பத்தாம் நூற்றாண்டில் சோழன் விஜயாலயன் காலத்திற்குப் பின்தான் சிவன் கோயில்களில் அம்பிகைக்கு என்று தனி ஆலயங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. அதற்கு முந்திய காலத்தில் அம்பிகைக்கு என்று தனிக் கோயில்கள் இருக்கவில்லை. காஞ்சியில் உள்ள அத்

148