பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11


சு. சரிதான்-முதலியார் சார்-நான் போரேன்-ஆம்.நான் சொல்ரத்தே கொஞ்சம் கேளுங்கள்-இன்னம் கூட ஒரு லச்சம் தர்ரேன்-மொத்தம் மூனு லட்சம் !

வி. நீங்கள் இப்பொழுது வெளியே போகிறீர்களா?அல்லது நான் உங்களை பிடித்து வெளியில் தள்ளட்டுமா ?

சு. கோவம்-வேணாம் சார்!-கடசி ஆபர் (Offer) நாலு லட்சம்!

வி. (அவனைப் பிடித்து) போங்கள் வெளியே!

சு. இல்லாப் போன-நானு பத்ரம் மேலே - சம்மன் பண்ணரே !

வி. பண்ணிக்கொள், போ ஒழிந்து யமனே! (அவனை வெளியில் தள்ளிக் கதவைத் தாளிடுகிறான்.) இந்த ஜபானியனுக்கு நான் செய்யும் பிரயத்னம் எப்படி தெரிந்தது ?- நாலு லட்சம் வரையில் கொடுக்கிறானா! இதெல்லாம் உதவாது - அமெரிக்காவிலிருக்கும் எனது நண்பருக்கன்றி வேறு யாருக்கும் இந்த ரகசியம் தெரியாதென்று நினைத்திருந்தேன்! இது எப்படி வெளியாகிய தென்று உடனே நான் கண்டுபிடிக்க வேண்டும்! - பொன் மார்க்ஸ் கொடுக்கிறானா! ஜெர்மானியர்களுக்குக்கூட இது தெரிந்துவிட்டதா என்ன ! சரி முதலில் இந்த சூட்சுமத்தை நான் கண்டு பிடித்தாகட்டும். (மேஜையருகில் போய், காஸ் (Gas) விளக்கினால் குப்பியைச் சூடாக்கிப் பார்க்கிறான்) இன்னும் அந்த திராவகத்தின் வேகம் போகவில்லை! - இதை மாத்திரம் நான் நிறுத்துவேனாயின் !

(வெளியில் மெல்ல கதவைத் கட்டுகிற சப்தம்)

வி. ஹா! இந்த இழவிற்கு நான் என்ன செய்கிறது ? - இன்னொருமுறை இந்தக் கதவைக் தட்டுகிற சப்தத்தைக் கேட்டால் சாவியின் துவாரத்தின் வழியாக நான் சுடுகின்றேன்-வெளியில் யாராயிருந்த போதிலும்! (தன் கைத் துப்பாக்கியை அந்த துவாரத்தில் நுழைக்கிறான்)