பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
16


அ. கண்ணே! கருணையே வடிவான கடவுள் உனக்கு உதவுவாராக! நமது தேசத்திற்கு முன்னோர்களான ரிஷீஸ்வர்களுடைய தவப்பயனால், உனது இரகசியத்தைப் பூர்த்தி செய்ய வேண்டிய புத்தி உனக்குக் கிட்டுமாக விரைவில்!

வி. நமது முன்னோர்களுக்கு விசாலமான புத்திகூர்மையிருந்த போதிலும், அவர்களிடம் இந்த குறை ஒன்றிருந்தது, தாங்கள் கண்ட பெரிய ரகசியங்களையெல்லாம் மனித வர்க்கம் அனைத்தும் க்ஷேமத்தையடைய உபயோகப்படும்படி வெளியிடாதிருந்தனர்.

அ. மனித வர்க்கம் க்ஷேமத்தை யடையும்படியே அந்த இரகசியங்களே அவர்கள் பலருக்குக் கூறா திருந்தார்களோ என்னவோ ? - யார் அறிவார் ?

அ.அ. பரமேஸ்வரன் உன் மனோபீஷ்டத்தைப் பூர்த்திசெய்வாராக! - நாங்கள் விடைபெற்று கொள்கிறோம் - எதற்கும் ஈஸ்வரனே நம்பு! (இருவரும் போகிறார்கள்)

வி. ஈஸ்வரனை நம்பு! -அதுதான் கஷ்டமாயிருக்கிறது. - நான் தேடுவதை எனக்குக் கொடுப்பாராயின் இப்பொழுது! - அவரை நம்புகிறேன் ! (சிரித்துக்கொண் டே, ரசாயணப் பரீட்சை மேஜையருகில் போகிறான். குப்பியைப் பார்க்கிறான்) - ஓ! ஆச்சரியத்திலும் ஆச்சர்யம் ! என் கடைசி பரீட்சை பலித்தது!. ஜெயம் ! நான் நாடியதைக் கண்டு பிடித்துவிட்டேன்! தெய்வாதினமாய் ! ஈஸ்வரன் ஒருவர் இருக்கிறார் என்று நான் நம்ப வேண்டியது தான். அமெரிக்காவிலுள்ள என் சிநேகிதருக்கு இதை முதலில் சொல்வதாக வாக்களித்தேன் பிறகு என் தந்தை தாயர்க்குச் சொல்கிறேன். (அருகிலிருக்கும் ஓர் ஒலிபெருக்கியைப் போலிருக்கும் யந்திரத் தருகில் போய்) ஹல்லோ! -ஹல்லோ !- ஹல்லோ! - ஆம் விஸ்வம் பேசுகிறது - ஆம் - வென்ட்வொர்த்! என் ரகசியத்தை முற்றிலும் முடித்து விட்டேன் !-ஆம்-இப்பொழுது அதைச் சொல்ல முடியாது உனக்கு - எவ்வளவு வேகமாய் ஆகாய விமானத்தில் இங்குவர முடியுமோ, அவ்வளவு வேகமாய் வந்து சேர் - உடனே! இதற்குள் என் தகப்ப