பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

கடற்படை உத்தியோகஸ்தன், கைகளிலும் கன்னங்களிலும் மிகவும் காயப்படுத்தப்பட்டிருக்கும் விஸ்வநாதனுடன் வருகிறான்.

ஹெ. வா ஐயா - விஸ்வம் - எப்படி யிருக்கிறாய் இப்பொழுது ?

(கடற்படை உத்தியோகஸ்தன் போகிறான்)

வி. பரமேஸ்வரன் விட்ட-சந்தோஷ ஸ்திதியில் இருக்கிறேன்.

ஹெ. இதோ பார் விஸ்வம்-உன்னுடைய கடவுளே ஏன் எல்லாவற்றிற்கும் நடுவில் இழுத்துக்கொண்டு வருகிறாய்? - அவர் உன்னே எந்த ஸ்திதிக்குக் கொண்டு வந்திருக்கிறார் என்பதை நீதான் பார்க்கிறாயே .

வி. பார்க்கிறேன்.

ஹெ. இன்னும் அவரையே நம்புகிறாயா?

வி.ஆம்.

ஹெ.என்ன விந்தையான புத்தியுடையவன்! - இன்னும் அவர் உனக்கு உதவப்போகிறாரென்று நம்புகிறாயா?

வி. ஆம்

ஹெ.ஆமாம்-எப்படி உனக்கு உதவப்போகிறார்?

வி.இந்த ஹீனமான - உடலை விட்டு - ஆவியைப் பிரித்தோ-வேறு எந்த விதத்தாலோ !

ஹெ. என் கையில் ஒரு முறை பட்டபின்-வேறு விதம் ஒன்றுமில்லை -

கடற்படை உத்தியோகஸ்தன் வேகமாய் வருகிறான்.

க-உ. நம்முடைய நீர்மூழ்கிக் கப்பலின் யந்திரம் ஏதோ கெடுதியை அடைந்திருக்கிறது!

ஹெ. என்னைத் தொந்திரவு செய்யாதே இப்பொழுது - நான் முக்கியமான வேலையிலிருக்கிறேன் தெரிய-