பக்கம்:இந்தியப் பெருங்கடல்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

இத்துளைகளைச் சூழ்ந்துள்ள பகுதி, அதற்கடுத்துள்ள பகுதியைவிட 8 மடங்கு அளவு உப்பு மிகுந்ததாக உள்ளது. இவை செங்கடலின் மையத்தில் உள்ளன. இவற்றில் வழக்கத்திற்கு மாறன இரும்புப் படிவுகள் 6000 அடி ஆழத்தில் காணப்படுகின்றன. இங்கு வெப்பநிலை 55.9°C. எவரெஸ்ட் உச்சியில் வெப்பக்காற்றைக் காண்பது எவ்வளவு வியப்பாக இருக்குமோ, அவ்வளவு வியப்பாக இக்கண்டுபிடிப்பு உள்ளது. இந்த ஆழத்தில் வழக்கமாக உள்ள வெப்பநிலை 4-5°C ஆகும். அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் இவ்வுண்மையினை வெளிப்படுத்தியுள்ளனர்.

எண்ணெய் வளம்

1974-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் பம்பாய்க் கடற்கரைக்கு அப்பாலுள்ள கடலின் அடியில் எண்ணெய் (பெட்ரோலியம்) எடுக்க்ப்பட்டது. இப்பகுதிக்குப் பாம்பே ஹை (Bombay High) என்று பெயர். 1976 மேத் திங்கள் 21-ஆம் நாளிலிருந்து எண்ணெய் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் அளவு ஆண்டுக்காண்டு உயர்ந்த வண்ணம் உள்ளது. தமிழ்நாடு, கேரளம், குஜராத், ஒரிசா முதலிய மாநிலங்களின் கடற்கரைப் பகுதிகளில் எண்ணெய் கிடைக்க வாய்ப்புள்ளது. இப்பண்படா எண்ணெயிலிருந்து பெட்ரோல் முதலிய எரிபொருள்கள் கிடைக்கின்றன.

மீள் வனம்

இந்தியக்கடல் மீன்வளம் மிக்கது. காட்டாக, அரபிக் கடலில் ஒமன், மஸ்கட் ஆகிய கடற்-