பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 முதலாவது ஆசிய விளையாட்டுக்கள் இரண்டாவது முறையாக இந்தியாவிலே ஒன்பதாவது ஆசிய விளையாட்டுக்கள், 1982, நம்வபர் 19ந் தேதி மிகவும் விமரிசையாக ஆரம்பமாயின. என்பதை நீங்கள் அறிவீர்கள். இன்று எந்த அளவில் ஏற்றமும் எழுச்சியும், ஓங்கிய உயர்வு பெற்ற உற்சாகத்துடனும் விழா நடத்தும் மும் மர முயற்சியில் ஈடுப்பட்டிருந்தோம் என்பதை நீங்கள் ரேடியோ, தொலைக் காட்சி மற்றும் பத்திரிக்கைகளில் கேட்டும் கண்டும் படித்தும் மகிழ்ந்திருப்பீர்கள். இதே உற்சாகமும் உழைப்பும், முதன் முறையாக நடத் திய முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இருந் தன என்ருல், அதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டாமா ? 1951ம் ஆண்டு, இந்தியத் தலைநகராம் தில்லி மாநகரத்திலே, மார்ச்சு மாதம் 4ந் தேதி முதல் 11ந் தேதி வரை, அதாவது 8 நாட்கள் நடைபெற்று முடிந்தன, ஆப்கானிஸ்தானம், பர்மா, சிலோன், இரான், இந்தோனே ஷியா, ஜப்பான், நேபாளம், பிலிப்பைன்ஸ்,