பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 எட்டாவது ஆசிய விளையாட்டுக்கள்-1978 எட்டாவது ஆசிய விளையாட்டுக்களை நடத்திட நமது அண்டை நாடான பாகிஸ்தான் முன் வந்தது. ஆளுல் 1977ம் ஆண்டில் நடைபெற்ற இராணுவம் புரட்சியும். அதனுல் ஏறபட்ட ஆட்சி மாற்றமும், அரசியல் பேர்க்கும் அங்கே அமைகியான சூழ்நிலையைத் தோற்றுவிக்க முடியாததன் காரணமாக, பாகிஸ்தானும் போட்டிகனே ஏற்று நடத்தவும் முன் வர வில்லை. எப்படியாவது போட்டிகளே நடத்தியே ஆக வேண்டும். என்று முயற்சித்த ஆசிய விளையாட்டுக் கழகம், முதலில் ஜப்பான அணுகி நடத்தி கரு மாறு கேட்டுக் கொண்டது. ஜப்பான் தன் இயலா மையைக் கூறி ஒதுங்கிக் கொண்டது. அடுதது, தென் கொ ரியாவிடம் கேட்கப்பட்டது. அந்த நாடும் இந்தக் கோரிக்கையை நிராகரித்து விடவே, மூன் ருவது முயற்சியாக மலேசியாவை முற்றுகையிட்டுப் பார்த்தது. அவ்வளவு குறுகிய கால அவகாசத்தில், அந்த அழைப் அஜன அந்த நாடும் ஏற்றுக் கொள்ள இயலாத நிலை என்று. நிராகரித்து விட்டது. இந்தியாவில் நடத்த முடியுமா என்ற யோசனையும் அங்கு இட்ம் பெற்றது.