உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

82 தி.மு.க. அரசைக் கவிழ்த்ததோடு இந்திராவும் இந்திராவின் பரிவாரங்களும் அமைதியடையவில்லை! இருபத்து ஐயாயிரம் பேரை சிறையில் போட்டதோடு ஆறுதல் கொள்ளவில்லை. ஐநூறு பேரை மிசாக் கைதி க்ளாக அடைத்ததோடு திருப்தி கொள்ளவில்லை. தியாக மறவன் சிட்டிபாபுவை சாவூருக்கு வழி அனுப்பி வைக்கிற அளவுக்கு வயிற்றில் மிதித்து நோயில் படுக்க வைத்தார்களே; அத்துடன் அவர்களின் பழிவாங்கும் உணர்ச்சி முடியவில்லை. சாத்தூர் பாலகிருஷ்ணன் மதுரைச் சிறையில் மாண்டாரே; அத்துடன் வெறி தணியவில்லை. நால்வகைப் படைகள்! தி.மு.க. தலைமையை அகற்ற வேண்டும். அதன்மூலம் கழத்தைச் சின்னாபின்னமாக்க வேண்டுமென்றும் டெல்லியில் திட்டம் தீட்டினர். அந்தத் திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு நோக்கி நால்வகைப் படையும் புறப்பட்டது. தேர்ப்படை! அதில் கரன்சி நோட்டுக்களை ஏற்றிக் கொண்டு “கபூர்கள்” வந்தார்கள். அந்தப் படையெடுப்பில் தி.மு. க.வின் முன்னணி வீரர்களாக இருந்த சிலர் வீழ்ந்தார்கள். யானைப்படை! அதில் 'மிசா' எனும் சுழல் துப்பாக்கி பிடித்த முரட்டு அதிகாரிகள் அமர்ந்து கொண்டு முதலில் மிரட்டல் வெடிகளைக் கிளப்பினார்கள்! மிரளாதோர் சிறைக்குள் வாடினர். மிரண்டவர்கள் கழகத் தலைமைக்கு விரோதமாக நீட்டிய தாளில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு, பகைவர்கள் பக்கம் சேர்ந்து கொண் டனர்.