உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

64 இருந்தால், மீண்டும் தழைத்த கிளைகளுடன் கூடிய தருவையும், தருநிழலையும், நிழல் கனிந்திடும் சுகத்தையும் பெறலாமன்றோ? அதுபோன்ற, கழகச் செயல் வீரர்களின் அடித்தள அமைப்புக்களாம் அழுத்தமான வேர்கள் பூமிக்குள் பிடிப்பாக ஓடியிருந்தன. கழகத் தலைமையும் உறுதியான அடிமரம் போல் பெருங்காற்றுக்கும் அசைந்து கொடுக்கா மல் நின்றது. கிளைகள் சில! இலைகள் சில! ஒடிந்தன! உதிர்ந்தன! இந்திராவினால் கழக அரசைத்தான் தீர்த்துக்கட்ட முடிந்தது. கழகத்தை அழிக்கும் முயற்சியில் ஒரு அங்குலம் கூட முன்னேற முடியவில்லை. சரி; கழகத் தலைமையை அழிக்க இயலவில்லை- கழ கம் உருவாக்கியுள்ள தமிழ்த் தேசீய உணர்வை நசுக்கி பொசுக்கி விடலாமென்று திட்டமிட்டார். அதற்கேற்பச் செயல்படக்கூடிய இரண்டு அதிகாரிகளை ஆளுநரின் ஆலோசகர்களாக டெல்லியிலிருந்து தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தார். காமராசர் எரியூட்டப்பெற்ற இடம் கழக அரசினால் நினைவு மண்டபமாக எழுப்பப்பட்டிருந்தது அல்லவா, அந்த நினைவு மண்டபத்திற்கு ஒரு திறப்பு விழா ஏற்பாடு செய்தார்கள்! அநியாயம்! சடலம் கொளுத்தப்பட்ட இடத்தைத் திறந்து வைக்க ஒரு வைபவம்! அந்தத் திறப்பு விழாவுக்கு இந்திராகாந்தியே வந்தார். அந்த மண்டபத்தை அவர் திறந்து வைத்ததற்கான கல்லும் நாட்டப்பட்டது.