உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இதனை மனோன்மணியம் ஆசிரியர் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்களேகூடக் கண்டித்துக் கருத்தறி வித்துள்ளார். அந்தக் கருத்தை அப்படியே ஏற்றுக் கொண்டசரித்திர வல்லுநர் வின்சென்ட்ஸ்மித் தன்னால் அந்த அடிப் படையைப் பின்பற்ற இயலவில்லை என்பதற்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டார் என்பதிலிருந்தே, இந்திய வரலாறு தமிழகத்திலிருந்துதான் எழுதப்பட வேண்டு மென்பது உறுதிப்படுத்தப்படுகிறது அல்லவா? கி. மு. இருபதிலே பூம்புகார் பட்டினத்தைத் தலை நகராகக் கொண்டு கரிகால் பெருவளத்தான் சிறப்புற ஆட்சி நடத்தினான். அதற்குமுன்பே பாண்டியர்கள் தமிழ்ச்சங்கம் கண்டனர். மூவாயிரம் அல்லது நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்மொழிக்குரிய இலக்கண மாம் தொல்காப்பியம் பிறந்துவிட்டது. ஒரு மொழி இலக்கண மெருகினைப் பெறுகிறது என்றால், அதற்கு முன்னர் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் ஆண்டுகளாவது அந்த மொழி, வழக்கில் இருந்து மெல்ல மெல்ல வளர்ந்திருக்க வேண்டும். எனவே, தமிழ்மொழியின் தொடக்க காலம் எட்டாயிரம் ஆண்டு கட்கு முற்பட்டது எனக் கொள்வதில் தவறே இல்லை. சரித்திரச் சதி குடி மூத்த மொழி - மூத்த நிலம்-மூத்த வரலாற்றுக்குத் தொடக்கமாக அமையாமல் "சரித்திரச் சதி" ஒன்று திட்டமிட்டு நடந்தேறிவிட்டது. அயோத்தி இராமன் காலத்திலிருந்தோ, அல்லது அலெக்சாண்டர் படையெடுப்பிலிருந்தோ தொடங்கி, ஆங்கிலேயர் ஆட்சி முடிவுற்று இந்திய நாடு விடுதலை