பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/136

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 அது சமமானது என்பதோடு, உள்நாட்டிலுள்ள எல்லா வகுப்பினரும், பிரிவினரும் சமமானவர்கள் என்ற கொள்கையும் இதில் அடங்கியிருந்தது.

இரண்டாவது தத்துவமான ஜனநாயகம் : ம த் தி ய அரசாங்கத்தில் மக்களின் ஆட்சியை அமைப்பதோடு இது நின்றுவிடவில்லை. இதன்படி மாகாணங்கள், மாவட்டங்கள், நகரங்களிலும் ஆட்சியில் மக்களுக்குப் பொறுப்பிருக்க வேண்டும். அதிகாரங்கள் ஒரே இடத்தில் குவிந்திராமல் எங்கும் பரவலாக இருக்கவேண்டும்.

மூன்ருவது தத்துவமான சோஷலிஸம் : இது மிகவும் முக்கியமானது. சுவரை வைத்துத் தான் சித்திரம், மக்களை வைத்துத் தான் அரசு. எனவே எல்லா மக்களும் தொழில்கள் செய்யும் வாய்ப்புடன், உணவும், வாழ்க்கை வசதிகளும் பெற இதன்படி உரிமையுண்டு. டாக்டர் ஸென் மக்கள் ஒட்டுச் சாவடிகளுக்குச் சென்று ஒட்டுப் போடுவதுடன் ஜனநாயகம் முடிந்து விடாது என்று கண்டு, இந்த மூன்றாவது தத்துவத்தையும் சேர்த்திருந்தார். ஜனநாயக அரசாங்கத்தின் கடமை மக்களுக்கு ஸோஷலிஸ முறையில் சகல வசதிகளும் கிடைக்கும்படி செய்யவேண்டியதே. ஸன் யாட் - லென் கார்ல் மார்க்ஸின் கம்யூனிஸத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்தார் எனினும், இது அந்தக் கம்யூனிஸமன்று. நாட்டுக்கு ஏற்ற முறையில், தொழில்களுக்குரிய மூலதனத்தை முறைப்படுத்தலும், விளை நிலங்களை விவசாயிகளுக்குச் சமமாகப் பங்கிட்டளித்தலும் இதில் அடங்கும். நாட்டின் உலோகக் கனி வளங்கள் போன்ற இயற்கைச் செல்வங்கள் யாவற்றையும் அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாடு முழுவதும் பெரிய அளவில் புனர் நிர்மாண வேலைகளை அரசாங்கம் மேற்கொண்டு, எல்லா மக்களுக்கும் சமமான வாழ்க்கை வசதிகளை அளிக்க வேண்டும்.

126