பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


1965 ஆகஸ்டு 5-ம் தேதி தொடங்கியது. பாகிஸ்தானுக்கு எப்பொழுதும் காஷ்மீரிலேயே கண் இருக்கிறது.

லடாக் பகுதி

இயற்கை எழில் மிகுந்த காஷ்மீர் இராஜ்யம் ஆப்கானிஸ்தானம், ஸோவியத் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் எல்லையிலுள்ளது. சீன மாகாணமாகிய சிங்கி யாங்கும், புதிதாகச் சீன பிடித்துக் கொண்டுள்ள திபேத்தும் காஷ்மீரின் தென் கிழக்குப் பகுதியான லடாக் ஜில்லாவை அடுத்திருக்கின்றன. இந்திய நாட்டிலுள்ள மாவட்டங்களில் லடாக்தான் மிகப் பெரிய ஜில்லா. இதன் பரப்பு 45, 76.2 சதுர மைல்; ஜனத்தொகை சுமார் 40,000 இருக்கக் கூடும். மக்கள் சம்பாக்கள், லடாக்கியர், பால்டிகள், டார்டுகள் முதலிய இனங்களைச் சேர்ந்தவர்கள். ஒரு சில முஸ்லிம்களைத் தவிர, மற்றையோர் அனைவரும் பெளத்த மதத்தினர். சமய வாழ்க்கையில் இவர்களுக்கும் திபேத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

தொடர்ச்சியான மலைகள் நிறைந்த இந்த லடாக் பகுதி 15,000 அடிக்கு மேல் உயரமான மலைச்சாரல்களிலுள்ளது. இங்கே உழுது பயிரிடவும், கால்நடைகளை மேய்க்கவும் ஏற்ற நிலங்களைக் காட்டிலும், கற்பாறைகளும் சரளை நிறைந்த பூமியுமே அதிகமாக உள்ளன. இப்பிரதேசத்தின் வலது புறத்தில் தென் கிழக்கிலிருந்து வடமேற்காக இமயம், ஜஸ்கார், லடாக், முஸ்டாக், க்யூன் லுன் என்ற மலைத் தொடர்கள் அமைந்திருக்கின்றன. இதன் நடுவே சிந்து நதி பாய்வதால், அதன் பள்ளத்தாக்கு மாவட்டம் நெடுகிலும் பரந் துள்ளது. சிந்து நதியின் உபநதிகளில் முக்கியமானவை லஸ்கர், ஷியோக் என்பவை. நுப்ரா, சாங் சென்மோ நதிகள் ஷியோக்கின் உபநதிகள். வட பகுதியில் சிப்சாப்,

12