பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/189

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 வர். அவர் அரசியல்ஞானி, கவிஞர், தத்துவஞானி என்ற பல முறையில் போற்றப்பட்டு வருகிறார்.

1949-இல் குடியரசை நிறுவிய பின், டிசம்பர் 16-ந் தேதி மா - ஸோவியத் ரஷ்யாவுக்குச் சென்று ஸ்டாலினுடன் இரண்டு மாதங்களுக்கு மேல் தங்கியிருந்தார். அப்பொழுதுதான் அவர் முதலாவது கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யாவையும் சுற்றிப் பார்க்க முடிந்தது. பின்னால் ஏழு ஆண்டுகள் கழிந்து, மீண்டும் அவர் அங்குச் செல்லவேண்டியிருந்தது. ஆனால் மா - தாம் நேரில் செல்லாமல் பிரதமர் சூ என்-லாயை அனுப்பி வைத்தார். அப்போது கம்யூனிஸ்ட் நாடுகளான போலந்தும் ஹங்கேரியும் ரஷ்யாவுக்கு எதிராகக் கிளம்பியிருந்தன. சூ-போலந்துக்கும் ரஷ்யாவுக்கும் மத்தியஸ்தம் செய்து வைத்தார். ஹங்கேரி 1956 இல் ரஷ்யாவுக்கு எதிராகப் புரட்சி செய்ததில், ரஷ்யா ஸோவியத் டாங்குகளை அனுப்பித் தலைநகரான புடா பெஸ்ட் நகரையே தகர்த்தெறிந்துவிட்டது. ஸ்டாலினுக்குப் பின்னால் ஐரோப்பியக் கம்யூனிஸ்ட் நாடுகளிலும் மாஸே-துங்கின் செல்வாக்கும் பரவலாயிற்று.

ரஷ்யாவில் லெனின் மரணத்திற்குப் பின்னால் கட்சித் தலைமைக்குப் போட்டி ஏற்பட்டது. ஸ்டாலினுக்குப் பின்னாலும் தலைமைக் குழுவில் பெருங்குழப்பம் தோன்றிய பிறகே குருஷ்சேவ் தலைமைப்பதவி ஏற்றார். சீனாவில் மாவுக்குப் பின்னால் குழப்பம் ஏற்படக்கூடும். மாவுக்கும் வயது எழுபத்து மூன்றாகின்றது.

யதேச்சாதிகாரம்

கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆரம்பத்தில் பெரிய புரட்சி வீரர்களாகவே தோன்றுகின்றனர். ஆனால் அவர்கள் பதவிகளில் அமர்ந்த பிறகு, அவர்களுடைய நிலைமையே மாறிவிடுகின்றது. இதற்கு மிகச் சிறந்த

179