பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பிரதிநிதிகளும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றனர். பின்னலும் இந்திய அதிகாரிகள் எல்லைப் பிரதேசங்களைச் சுற்றிப்பார்த்து, அளவெடுத்து, எல்லைகளைத் தெள்ளத் தெளிவாகத் தரைப் படங்களில் வரைந்து வைத்திருக்கின்றனர். சீன அரசாங்கம் 1893, 1917, 1918 ஆகிய ஆண்டுகளில் வெளியிட்ட பூகோளப் படங்களிலும் இந்தியா குறித்துள்ள எல்லைகளே காணப்படுகின்றன. உண்மை இவ்வாறிருக்க, சீன அரசாங்கம் புதிதாக வெளியிட்ட படங்களில் காஷ்மீர் இராஜ்யத்தில் 5,000 சதுரமைல் அளவுள்ள பிரதேசத்தைச் சீனப் பிரதேசமாகக் காட்டுகின்றன. மேலும் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தை சாேவியத் ரஷ்யா அங்கீகரித்திருப்பினும், சீனக் கம்யூனிஸ்ட் அரசாங்கம் இன்னும் அங்கீகரிக்க மறுத்து வருகின்றது; மறுப்பதுடன் நிற்காமல், காஷ்மீரின் மீது யாதொரு சட்டபூர்வமான உரிமையும் இல்லாத பாகிஸ்தானுடன் சீன, காஷ்மீர் எல்லை பற்றி ஒப்பந்தம் பேசி முடிவு செய்திருக்கின்றது. இந்தியாவைச் சேர்ந்த காஷ்மீரின் ஒரு பகுதியைப் பாகிஸ்தான் சீனவுக்குத் தானம் செய்ய முற்பட்டுவிட்டது!

1957 முதல் லடாக்கில் சீனருடைய ஊடுருவல் வேலைகள் நடந்துவந்தன. குர்னக் கோட்டையைச் சீனப் படையினர் கைப்பற்றிக் கொண்டனர். அக் ஸாய் சின் சமவெளியில் நூறு மைல் நீளத்திற்கு நெடிய சாலை ஒன்றை அவர்கள் அமைத்துக் கொண்டனர். அச்சமவெளியின் வட பகுதியில் நம் ரோந்துப் படையிலிருந்த சிப்பாய்களைக் கைது செய்து ஐந்து வாரங்கள் வரை வைத்திருந்து கொடுமைப்படுத்தினர்கள். பாங்காங் ஏரிப் பக்கம் ஆயுதம் தாங்கிய சீனத் துருப்பினர் ஆறு இந்தியப் போலீஸ்காரரைக் கைது செய்ததுடன், ஸ்பாங்கூரில் முகாமும் அமைத்துக்கொண்ட

16