பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 களிலும் ஒர் இடம் பெற்றிருக்க முடியும். திபேத்து இரண்டையும் செய்யாமல் ஒதுங்கியிருந்து விட்டது. உலக அரசியல் போக்குகளைப் பற்றி அதற்கு அப்போது எடுத்துச் சொல்வாரில்லை.

சீனப் படையெடுப்பு

முன் கூட்டியே படைகளைத் திபேத்தின் கிழக்கு எல்லைகளில் குவித்து வைத்துக் கொண்டு, கம்யூனிஸ்ட் சீன 1950-இல் அந்நாட்டின் மீது படையெடுத்தது. திபேத்து முக்கியமான நாடுகளுக்குச் செய்தி அனுப்பி இராணுவ உதவி கோரியது. பிரிட்டன் இந்தியாவுக்குச் சுதந்தரம் அளித்து விட்டதால், அது தொலைவிலிருந்து உதவிசெய்ய முடியாததற்கு வருந்துவதாகத் தெரிவித்தது. அமெரிக்காவும் அதேபோல் கையை விரித்துவிட்டது. இந்திய அரசாங்கம், தான் இணுவ உதவி அனுப்ப இயலாதென்றும், திபேத்தும் எதிர்த்துப் போரிடாமல், 1914-ஆம் வருடத்திய லிம்லா ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு, சீனாவுடன் சமாதான உடன்படிக்கை செய்துகொள்ளும்படியும் ஆலோசனை கூறிற்று.

இந்நிலையில் திபேத்தியப் படைகள் சில இடங்களில் சீனரை எதிர்த்துப் போரிட்டுத் தோற்றுவிட்டன. வாலிபத் தலாய் லாமாவே பட்டம் கட்டிக் கொண்டு அரசப் பிரதிநிதியிடமிருந்து தாமே ஆட்சியை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று மக்கள் விரும்பினர். அப்பொழுது தலாய் லாமாவுக்கு வயது பதிறுைதான். எனினும் மக்களின் வேண்டுகோளை அவர் ஏற்றுக் கொண்டார். ஐக்கிய நாடுகளின் சபைக்கு உதவி கோரி மனு அனுப்பப்பட்டது. போரை நிறுத்திச் சமாதானம் செய்து கொள்ளும்படி தலாய் லாமா சீனாவுக்கும் செய்தி அனுப்பினர்.

222