பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுதந்தர இந்தியா

‘சுதந்தரமாக உங்கள் வேலையைத் தொடர்ந்து செய்யுங்கள். சமைத்த பிறகு பலர் சாப்பாட்டுக்கு வந்து அமர்வார்கள். (ஆதலால்) கவனமாயிருங்கள். வேலையைச் செய்யுங்கள் !’

—சுவாமி விவேகானந்தர்



ஆசியாவின் விழிப்பு

இந்தியாவுக்குப் பாரதம் என்று பெயர், பரதக் கண்டம் என்றும் சொல்லுவார்கள். ஆயினும் வெளி நாட்டார் வைத்த இந்தியா என்ற பெயரே இப்பொழுது நிலைத்துவிட்டது. செல்வம் மிகுந்த நாடு என்று இது புகழ்பெற்றிருந்தது. இந்தியாவின் சுரங்கச் செல்வங்களையும், இரத்தினங்களையும் பற்றி ஷேக்ஸ்பியர் முதல் பல புலவர்கள் பாடியுள்ளனர். இதே போல இந்தியாவின் கலைச் செல்வங்களையும், ஆன்மீகச் செல்வங்களையும் பற்றி மேலை நாட்டாரும் பிறரும் புகழ்ந்திருக்கின்றனர். பழங்காலத்தில் ஜப்பானியர் இந்தியாவை ‘டென்ஜிகு’ என்று அழைத்து வந்தனர். இதன் பொருள் சுவர்க்கம், அல்லது ‘தெய்விக நாடு’ என்பது. நம் கீதையும், உபநிடதங்களும், திருக்குறளும், பெளத்த நூல்கள் முதலிய பலவும் பிறநாட்டு மொழிகள் பலவற்றில் உள்ளன.

246