பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/271

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முறைப்படுத்திச் செலுத்தும் அதிகாரமே முக்கிய மானது என்றும் கோல் தெரிவித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியுள்ள கருத்தும் சிந்திக்கத் தக்கது: "சமுதாயத்தின் உற்பத்திச் சக்தி வியக்கத் தகுந்த முறையில் அபரிமிதமாக வளர்ந்திருந்த போதிலும், தற்கால மனிதன் தன் நிலை நிலையான தில்லை என்று ஏன் அஞ்சுகிருன் ? என் அபிப்பிராயத்தில் இன்றுள்ள முதலாளித்துவ ச மு:தா ய த் தி ன் பொருளாதாரக் குழப்பமே தீமையின் உண்மையான காரணம்.” வெளிநாடுகளில் தேசிய மயமாக்குதல் தொழில்களைத் தேசிய மயமாக்கும் முறையை வெளி நாடுகள் சில எவ்வளவு கையாண்டிருக்கின்றன என்று பார்ப்போம். இங்கிலாந்து பல நூற்ருண்டுகளாக முதலாளித்துவ முறையிலேயே முன்னேறிய நாடு. இந்த நூற்ருண்டில்தான் அங்கு தேசிய உரிமையாக்கு தல் ஒரளவு கையாளப்பெற்றுள்ளது. லண்டனில் நதி யில் போக்குவரத்து, பாலங்கள், துறைமுகக்கிட்டங்கி கள் முதலியவைகளை நிர்வகிப்பதற்கு லண்டன் துறை முகக் கழகம்’ ஒன்று அமைந்திருக்கின்றது. விளக்குகள் எரியவும், அடுப்பெரியவும் பயன்படும் கியாஸ் , மின் சாரம் ஆகியவற்றின் உற்பத்தியும் விநியோகமும் தேசியமாக்கப்பட் டிருக்கின்றன. 1947-இல் ரயில்வேக் களும், 35 மைல் அல்லது அதற்கு மேற்பட்ட துாரம் செல்லும் லாறிப் போக்குவரத்து, லண்டன் நகரப் பிரயாணிகளுக்கான பஸ் முதலிய வாகனங்கள் யாவும் தேசியமாயுள்ளன. ஆனல் 1958-இல் லாறிப் போக்கு வரத்து மீண்டும் தனியார் வசம் விடப்பட்டது. பருத்தி இறக்குமதியும் விற்பனையும் அரசாங்கத்தைச் சேர்ந் 26 I