பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/320

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூன்ருவது திட்டத்தில் 2,50,000 தயாரிக்கவேண்டும் என்பது குறிக்கோள். 1970-71-இல் 3-கோடி சைக் கிள்கள் தேவைப்படும். ரேடியோ சுமார் 7-லட்சம் : ரிவnவர்கள் இப் பொழுது தயாராகின்றன. டிரான்ஸிஸ்டர் ரேடியோக்களுக்குக் கிராக்கி அதிக மிருக்கிறது. அவைகளிலே தீப்பெட்டி அள வுள்ள சிறு ரேடியோக்கள் கூட வந்துவிட்டன. அகில இந்திய ரேடியோ நிலையங்கள் தங்கள் நிகழ்ச்சிகளே விரிவுபடுத்தி, ஒலிபரப்பும் நேரத்தையும் அதிகமாகக் கூட்டி வருவதால், நாடெங்கும், நகரங் களிலும், கிராமங்களிலும் மக்கள் செய்திகளையும், கலே நிகழ்ச்சிகளையும் கேட்டு இன்புற விரும்புவது இயற்கை. மேலும் இப்பொழுது "டெலிவிஷன்' என்ற பட ரேடியோவும் இந்தியாவுக்கு வந்துவிட்டது. இதன் மூலம் மக்கள் ஒரே நேரத்தில் செவிகளால் கேட்ப துடன், கண்களாலும் பார்த்துக் கொண்டிருக்க முடியும். சிமிண்டு உற்பத்தி பலவிதமான கட்டடங்களுக்கும், பாலங்களுக்கும், அணைகளுக்கும் ஆதாரமாகத் தேவையுள்ள பொருள் சிமிண்டு. சிமிண்டு உற்பத்தியில் நாம் மிகவும் முன் னேறியுள்ள போதிலும், நம் தேவையும் பெருகிக் கொண்டே போகின்றது. நம் நாட்டில் 38 தொழிற் சாலைகள் ஆண்டுக்கு 1, 12,00,000 டன் சிமிண்டை உற்பத்தி செய்கின்றன. மூன்ருவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முடிவில் ஆண்டுக்கு 1,26,00,000 டன் சிமிண்டு வீதம் உற்பத்தி செய்யப்பட்டது. J I 0.